பெரும்பாலும் கடைகளில் மைதா மாவை பயன்படுத்தி செய்யும் சர்க்கரை கஜுராவை, நம் வீட்டில் கோதுமை மாவை வைத்து செய்ய முடியும். அதுவும் மிக சுலபமாக! கடையில் கிடைக்கக் கூடிய அதே சுவையில் நாம் வீட்டில் செய்யும் கோதுமை ஸ்வீட் பிஸ்கட்டிலும் கிடைக்கும். ஆரோக்கியம் நிறைந்த இந்த கோதுமை மாவு பிஸ்கட், எப்படி செய்வது என்று தான் இன்றைய பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.
கோதுமையானது இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ளவும் ,உடல் எடையை குறைக்கவும்,எலும்பு அழற்சியை சரி செய்யவும், இதயத்தை வலிமையாக வைத்து கொள்ளவும், சாப்பிட்ட உணவுகள் எளிதில் செரிமானமாகவும், இரத்தத்தை சுத்தம் செய்யவும்,மலச்சிக்கலிலிருந்து விடுபடவும், சிறுநீரக கற்கள் ஏற்படுவதை தடுக்க போன்ற பல்வேறு மருத்துவ பயன்களை தரும் கோதுமையை வைத்து ஆரோக்கியமான பிஸ்கட் செய்யலாம் வாங்க.
undefined
கோதுமை பிஸ்கட் செய்ய தேவையான பொருட்கள்:
1 கப்-கோதுமை மாவு,
1/2 கப்- சர்க்கரை,
2 ஸ்பூன்- பட்டர்,
1சிட்டிகை-உப்பு,
தேவைக்கேற்ப எண்ணெய்,
தேவைக்கேற்ப தண்ணீர்.
செய்முறை:
சர்க்கரையை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒரு அகலமான பாத்திரத்தில், கோதுமை மாவு போட்டு, அதோடு அரைத்து வைத்துள்ள சர்க்கரை பவுடரையும் சேர்த்து, நன்றாக கலந்து விட்டு விடுங்கள். சிறிதளவு பட்டர் சேர்த்து நன்றாக பிசைந்து விட வேண்டும். தேவைப்பட்டால் ஏலக்காய்ப் பொடியும் சேர்த்து கொள்ளலாம்.
பின் 1சிட்டிகை உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து விரல்களாலே மாவை சாஃப்டாக பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவை 15 முதல் 20 நிமிடங்கள் வரை 1 மூடி போட்டு ஊறவைத்து விட வேண்டும்.அடுத்து சிறு சிறு உருண்டைகளாக, சப்பாத்தி உருண்டைகள் போன்று உருட்டி கொண்டு, சப்பாத்தி பலகையில் போட்டு, கொஞ்சம் தடிமனாக தேய்த்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுக்க வேண்டும்.
பன்னீர் பிரட் ரோல்! செய்யலாமா?
பின்பு, அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, நன்றாகக் காய வைத்து விட வேண்டும். அதன் பின் அடுப்பை சிம்மில் வைத்து, ரெடியாக உள்ள பிஸ்கட் மாவுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டியது தான். ஆரோக்கியமான கோதுமை பிஸ்கட் ரெடி!
மொறுமொறுவென்று கடையில் கிடைக்கின்ற அதே சுவையில் , நம் வீட்டில் செய்த இந்த பிஸ்கட்டிலும் கிடைக்கும். காற்றுப்புகாத 1 பாட்டிலில், ஆரிய பிஸ்கட்டுகளை சேகரித்து எடுத்துக் கொண்டால், ஒரு வாரம் வரை கூட வைத்து சாப்பிடலாம்.