வாருங்கள்! ருசியான நண்டு குருமாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அசைவ பிரியர்கள் வழக்கமாக சண்டே என்றால் அசைவ உணவுகளான மட்டன், சிக்கன், மீன் என்று சமைத்து சாப்பிட்டுவார்கள். அந்த வகையில் இன்று நாம் அசைவ உணவுகளில் ஒன்றான கடல் உணவான நண்டினை வைத்து அருமையான ஒரு ரெசிபியை காண உள்ளோம்.
பொதுவாக நண்டு வைத்து நண்டு மசாலா, நண்டு குழம்பு, நண்டு வறுவல் போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் நண்டு வைத்து சுவையான நண்டு குருமாவை காண உள்ளோம்.
இந்த நண்டு குருமா இட்லி, தோசை,சப்பாத்தி, புல்கா, சாதம் என்று அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். வாருங்கள்! ருசியான நண்டு குருமாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
நண்டு - 1/2 கிலோ
வெங்காயம் - 4
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
மிளகு தூள் -2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
கொத்தமல்லி -கையளவு
கறிவேப்பிலை- 1 கொத்து
சீரகம்- 1/4 ஸ்பூன்
பட்டை- 1 இன்ச்
கிராம்பு-2
தேங்காய் - 1/2 முடி
சோம்பு-1/4 ஸ்பூன்
கசகசா-1/2 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
ஈவினிங் ஸ்னாக்ஸிற்கு அருமையான "அவல் கட்லெட்"! செய்யலாம் வாங்க!
செய்முறை :
முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து கொண்டு அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் , தக்காளி மற்றும் மல்லித்தழையை மிக பொடியாகஅரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் .பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு, எண்ணெய் சூடான பின்பு, அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறிய பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும். அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர் ஆற வைத்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் சோம்பு,தேங்காய் மற்றும் கசகசா ஆகியவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு அகன்ற வாணலி வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்பு, அதில் பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளிக்க வேண்டும்.
அடுத்து அதில் சோம்பு, மிளகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைப் சேர்த்து தாளித்து பின் அரைத்த வெங்காய தக்காளி பேஸ்ட் , மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது இதில் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டு சேர்த்து கிளறி விட வேண்டும்.
வாணலியில் இப்போது 1 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி, ஒரு மூடி போட்டு மூடி நண்டினை வேக வைக்க வேண்டும். அவ்வப்போது மூடியினை திறந்து கிளறி விட வேண்டும்.
நண்டு வெந்து,கலவை கொஞ்சம் கெட்டியாக வந்த பிறகு, அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து கலந்து விட வேண்டும். இறுதியாக அரிந்த மல்லித் தழை சேர்த்து இறக்கினால் ஸ்பைசியான நண்டு குருமா ரெடி!