Christmas Cake and desserts Recipes |கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் "பிளம் கேக் " வீட்டிலிலேயே செய்யலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Dec 19, 2022, 1:07 PM IST

வாருங்கள்! சுவையான பிளம் கேக்கை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


தீபாவளி என்றால் நினைவிற்கு வருவது பட்டாசு மற்றும் ஸ்வீட்ஸ் தான் அதே போன்று கிறிஸ்துமஸ் என்றால் பிளம் கேக் தான் நமக்கு நினைவில் வரும். பிளம் கேக் இல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இருக்கவே இருக்காது. 

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையம் ஒன்றாகும்.பிளம் கேக்கானாது இந்த கிறிஸ்துமஸ்காகவே விசேஷமாக செய்யப்படும் ஒரு ரெசிபி ஆகும். 

Tap to resize

Latest Videos

வழக்கமாக இதனை நீங்கள் பேக்கரியிலோ அல்லது கடைகளிலோ வாங்கி சுவைத்து இருப்பீர்கள். இந்த முறை இதனை நாமே நம் வீட்டில் செய்யலாம். வாருங்கள்! சுவையான பிளம் கேக்கை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

முட்டை - 3
மைதா -100 கிராம்
பட்டர் - 100 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
கார்ன் பிளார் - 2 ஸ்பூன்
ஓமம் தூள் - 1/2 ஸ்பூன் 
திராட்சை - 30 கிராம்
சுக்குத் தூள் – 1/2 ஸ்பூன்
பால் - 1/4 கப்
முந்திரி,பிஸ்தா,வால்நட்- 40 கிராம்
செர்ரி பழம் – 50 கிராம் 

குழந்தைகள் விரும்பும் "வெண்ணிலா கப் கேக்" வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

செய்முறை:

முதலில் கார்ன் பிளாரை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொண்டு அதில் பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும் . பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ,கூழ் போன்று காய்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது பாலினை கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். 

முந்திரி,பிஸ்தா, வால்நட் போன்றவற்றை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையை மிக்சி ஜாரில் சேர்த்து பொடி போன்று செய்து கொள்ள வேண்டும். 

மைதா மாவினை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். பட்டரை உருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். செர்ரி பழங்களை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். 

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து அதில் உருகிய பட்டர் சேர்த்து சாஃப்டாக பிசைய வேண்டும்.1 கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். பின் முட்டையை மைதா சர்க்கரை கலவையில் ஊற்றி மீண்டும் பிசைய வேண்டும். 

இந்த கலவையை பாலில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின் கேக் டின்னில் பட்டர் பேப்பர் தடவி கலவையை பாதி வரும் வரை ஊற்ற வேண்டும். வெட்டி வைத்துள்ள செர்ரி பழங்களை தூவி மீதி மீதி கலவையை ஊற்ற வேண்டும். அதன் மேல் பொடித்த நட்ஸ்களை தூவி விட வேண்டும். 

ப்ரீ ஹீட் செய்து கொண்ட ஓவனில் கேக் டின்னை வைத்து சுமார் 40 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். அவ்ளோதான் சுவையான பிளம் கேக் ரெடி!

click me!