மணக்க மணக்க காரசராமான காலிஃபிளவர் பெப்பர் ஃப்ரை செய்யலாம் வாங்க!

By Asianet Tamil  |  First Published Feb 16, 2023, 5:07 PM IST

வாருங்கள்! காரசராமான காலிஃபிளவர் பெப்பர் ஃப்ரை ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இப்போது மார்க்கெட்களில் காலிஃபிளவர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. காலிஃபிளவரினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.காலிஃபிளவர் வைத்து மசாலா,கிரேவி, குருமா,மஞ்சூரியன் என்று பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம்.அந்த வகையில் இன்று நாம் காலிஃபிளவர் வைத்து காரசாரமான பெப்பர் ஃப்ரை ரெசிபியை செய்ய போகிறோம்.இதனை சாம்பார் சாதம், பருப்பு சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவைக்கு வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். ஒரு சிலர் இதனை செய்த அடுத்த சில நிமிடங்களில் அப்படியே அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.

வாருங்கள்! காரசராமான காலிஃபிளவர் பெப்பர் ஃப்ரை ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு:

  • காலிஃபிளவர்-1
  • கார்ன் பிளார் - 1/4 கப்
  •  மைதா மாவு - 1/2 கப்
  •  மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
  • மிளகாய் தூள் -1/2 ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு

ஃப்ரை செய்வதற்கு:

  • பட்டை -1 
  • கிராம்பு-3
  •  வர மிளகாய்-2
  •  ஏலக்காய்-2
  • பிரியாணி இலை -1
  •  இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
  • மல்லி தூள் -1 ஸ்பூன்
  •  பெரிய வெங்காயம்-2
  • மல்லித்தழை-கையளவு
  • உப்பு -தேவையான அளவு
  •  எண்ணெய் - தேவையான அளவு

Latest Videos

undefined

அரைப்பதற்கு:

  • சீரகம்-1 ஸ்பூன்
  • சோம்பு-1/4 ஸ்பூன்
  • மிளகு -2 ஸ்பூன்

 

மாவு அரைத்து கஷ்டப்படாமல் ஈஸியா மொறு மொறு "கடலை மாவு தோசை" சுடலாம் வாங்க!

செய்முறை:

முதலில் காலிஃப்ளவர் உதிர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது ஓர் பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி அதில் உதிர்த்து வைத்துள்ள காலிஃப்ளவர் சேர்த்து சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வைத்து பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.1 பவுலில் மைதா, கார்ன் பிளார்,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இதில் தண்ணீர் ஊற்றி கரைத்து உதிர்த்து சுத்தம் செய்து வைத்துள்ள காலிஃப்ளவர் பீஸ்களை போட்டு நன்றாக பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் 1 கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்துள்ள காலிஃபிளவர்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் சோம்பு, மிளகு மற்றும் சீரகம் ஆகியவை சேர்த்து நன்றாக பொடி போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றில் கிராம்பு,பட்டை, ஏலக்காய் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின் இதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட்டு, அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். இப்போது பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து சுமார் 5நிமிடங்கள் வரை கிளறி விட வேண்டும். இறுதியாக மல்லித்தழையை தூவி இறக்கி பரிமாறினால் காரசாரமான காலிஃபிளவர் பெப்பர் ஃப்ரை ரெடி!

click me!