வாருங்கள்! நெய் மணம் கமழும் கற்கண்டு பொங்கலை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் என்ன என்ன ரெசிபிக்கள் செய்யலாம் என்று யோசித்து கொண்டு உள்ளீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுடையது தான்.பொங்கலில் சர்க்கரை பொங்கல், கற்கண்டு பொங்கல், வெண் பொங்கல்,பால் பொங்கல் என்று பல வகையயன பொங்கல் ரெசிபிக்கள் உள்ளன.அந்த வகையில் இன்று நாம் நெய் மனம் கமழும் அருமையான கற்கண்டு பொங்கல் செய்வதை காண உள்ளோம்.
தைத்திருநாளான உழவர் தினத்தன்று சர்க்கரை பொங்கலும் , மாட்டு பொங்கல் அன்று இந்த கற்கண்டு பொங்கலும் செய்து உங்கள் குடும்பத்துடன் மகிழ்வுடன் கொண்டாடுங்கள். வாருங்கள்! நெய் மணம் கமழும் கற்கண்டு பொங்கலை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கற்கண்டு பொங்கல் செய்வதற்குத் தேவையான பொருட்கள்:
குட்டிஸ்களின் பேவரைட் "பன்னீர் ஆம்லெட்"!
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு டீ சாஸ் பான் வைத்து பால் ஊற்றி காய்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் குங்குமப்பூ சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் பருப்பு சேர்த்து நன்றாக கழுவி கொண்டு ,அதில் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு குக்கரில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
குக்கரில் 5 விசில் வரும் வரை வேக வைத்துக் கொண்டு, இறக்கி விட வேண்டும், விசில் அடங்கிய பிறகு, குக்கரை திறந்து சாதத்தினை மசித்துக் கொள்ள வேண்டும்.இப்போது அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிது நெய் சேர்த்து உருகிய பிறகு, கற்கண்டு மற்றும் பாலில் ஊறிய குங்குமப்பூ சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வரை அடுப்பை தீயினை மிதமாக வைத்து அதனை கலந்து விட வேண்டும்.
இந்த கற்கண்டு கலவையை குக்கரில் மாற்றிக் கொண்டு, 2 சிட்டிகை ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துக்க கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு சின்ன பானில் சிறிது நெய் விட்டு, நெய் உருகிய பிறகு, முந்திரி பருப்பு போட்டு வறுத்துக் கொண்டு அதனை குக்கரில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.அவ்ளோதாங்க! நெய்யின் கம கம வாசனையில் சூப்பரான கற்கண்டு பொங்கல் ரெடி! இந்த பொங்கலுக்கு கற்கண்டு பொங்கல் செய்து மகிழ்வுடன் கொண்டாடுங்கள்!