வாங்க பொட்டேட்டோ ரிங்ஸ்! எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
உருளைக்கிழங்கு ரிங்ஸ்! மாலை நேர ஸ்னாக்சாக எடுத்து கொள்ளலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இதனை ரவா, பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. வழக்கமாக செய்யப்படும் ஸ்னாக்ஸ் வகைகளில் இருந்து சற்று மாறுபட்ட ஒரு புதுமையான ஸ்னாக்ஸ் என்று கூறலாம்.குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையிலான ஸ்னாக்ஸ்.
வீட்டில் உள்ள பொருட்களைக் வைத்து ரொம்ப எளிமையாக செய்யலாம். சாக்லேட், பிஸ்கட் போல் இல்லாமல் இந்த வகையான ஸ்நாக்ஸ் சற்று மாறுபட்டு இருப்பதால் இதனை அனைவரும் விரும்பி உண்பார்கள்.தட்டில் வைத்து கொடுத்தால் அடுத்த நிமிடம் காலி ஆகும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும்.
வாங்க பொட்டேட்டோ ரிங்ஸ்! எப்படி செய்யலாம் என்று இன்றைய மூலம் பதிவின் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
ரவை – 100 கிராம்
உருளைக்கிழங்கு – 200 கிராம்
சில்லி ப்ளேக்ஸ் – 1 ஸ்பூன்
பட்டர் – 2 ஸ்பூன்
பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து தோலுரித்து , அதனை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸி ஜாரில் ரவை சேர்த்து அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு Pan இல் சிறிது பட்டர் சேர்த்து பட்டர் காய்ந்ததும், பொடியாக வெட்டி வைத்துள்ள பூண்டினை சேர்த்து வதக்கிய பின்பு, சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்பு அதில் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதிக்கும் போது அரைத்து பொடித்து வைத்துள்ள ரவையை சேர்த்து வேக விடவும், ரவை நன்றாக வெந்த பின் உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளவும். ரவையும் உருளைக்கிழங்கும் நன்றாக இணையும் படி கிளறி விடவும். அடுப்பை அணைத்து விட்டு அந்த கலவையை ஆற வைத்து விட்டு , பின்னர் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.
Dry Fish Gravy : கமகமக்கும் கிராமத்து கருவாட்டு குழம்பு!
மாவினை சப்பாத்தி கல் மீது சிறிது எண்ணெய் தடவி மேல் வைத்து திரட்டி, ஒரு மீடியம் அளவுள்ள பாட்டில் மூடி வைத்து சிறு சிறு வட்டங்களாக வெட்டி கொள்ளவும். வெட்டி வைத்துள்ள வட்ட வடிவங்களின் நடு பகுதியில் மீண்டும் ஒரு சின்ன பாட்டில் மூடி வைத்து வட்டம் மிட்டு சின்ன வட்டத்தில் இருக்கும் மாவினை வெளியே எடுத்தால் ஒரே அளவுள்ள ரிங்ஸ் வடிவம் கிடைத்து விடும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஒற்றி காய்ந்ததும் , அதிகமான சூட்டில் வைத்துக் கொண்டு, ரெடியாக வைத்துள்ள பொட்டேட்டோ ரிங்ஸ்ஸை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக மாறிய பின் எடுத்து நன்கு வடிகட்டினால் ருசியான பொட்டேட்டோ ரிங்ஸ் ரெடி!