சர்க்கரை நோயினை விரட்ட எளிய வழி - "கம்பு கொள்ளு தோசை"

By Dinesh TGFirst Published Jan 3, 2023, 4:57 PM IST
Highlights

வாருங்கள்!ருசியான கம்பு கொள்ளு தோசையினை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் வீட்டில் அடிக்கடி சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொண்டதால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது இயந்திர மற்றும் நவீன வாழ்க்கையில் துரித உணவுகள் மற்றும் மேற்கத்திய உணவுகள் என்று இன்றைய தலைமுறையினர் பலரும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள மறந்து விட்டார்கள் என்று கூறலாம். 

இதனால் பலரும் டயபடிஸ், உடல் பருமன், இரத்த கொதிப்பு என்று இன்னும் பல வகையான வியாதியால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் மருந்து ,மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும், உணவு முறைகளில் சிறு மாற்றம் செய்து அதனை முறையாக பின்பற்றினாலே பல விதமான நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். 

அப்படி சத்தான உணவுகளில் ஒரு வகையான கம்பு மற்றும் கொள்ளு இரண்டினையும் சேர்த்து ஒரு ரெசிபியை காண உள்ளோம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு என்று கூறலாம். மேலும் இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டாலே சர்க்கரையின் அளவை எளிதில் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். 

வாருங்கள்! ருசியான கம்பு கொள்ளு தோசையினை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள் :

கம்பு - 1 கப்
கொள்ளு - 1/4 கப் 
அரிசி - 1 கப் 
வர மிளகாய் - 5
வெந்தயம் - 1 ஸ்பூன் 
உப்பு- தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

அடுப்பு இல்லாமல் ஒரு ரெசிபியை செய்யலாமா - "பேல் பூரி"!

செய்முறை: 

முதலில் அரிசியை அலசி விட்டு பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டு, அதில் வெந்தயத்தையும் சேர்த்து சுமார் 4 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று கம்பு மற்றும் கொள்ளு ஆகியவற்றை அலசி விட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சுமார் 8 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

அரிசி மற்றும் வெந்தயம் ஊறிய பிறகு, தண்ணீர் வடிகட்டி அதனை அரைத்துக் கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஊற வைத்த கம்பு மற்றும் கொள்ளு ஆகியவற்றை வர மிளகாய் சேர்த்து அரைத்துக் கொண்டு அதனை அரைத்து வைத்துள்ள அரிசி மாவுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

பின் மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக மிக்ஸ் கொண்டு மாவினை சுமார் 7 மணி நேரம் வரை புளிக்க வைத்துக் கொள்ள வேண்டும். மாவு புளித்த பிறகு, கொஞ்சம் கலந்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு தோசைக் கல் வைத்து சூடான பின் , மாவை தோசையாக ஊற்றிக் கொண்டு சிறிது எண்ணெயயை சுற்றி விட வேண்டும். 

தோசை ஒரு பக்கம் வெந்த பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து பரிமாறினால் சத்தான கம்பு கொள்ளு தோசை ரெடி!

click me!