உடல் எடைய குறைக்க நினைத்ததும் எல்லோர் மனதிலும் உதயமாவது கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) எடுத்து கொள்வதை குறைக்க வேண்டும் என்பதுதான்.
உடல் எடை பலரும் சந்திக்கும் பிரச்சனையாக உள்ளது. அதனால் பல உடல் நலக் கோளாறுகளும் ஏற்படுகிறது. தமிழகத்தை பொருத்தவரை கார்போஹைட்ரேட் நிறைந்து காணப்படும் அரிசி சோறுதான் முதன்மையான உணவு பொருள். அதுவே உடல் எடையை கணிசமாக உயர்த்துவதாக மக்கள் நினைக்கின்றனர். இதனால் கார்போஹைட்ரேட்டை முற்றிலும் ஒதுக்கிவிட்டு டயட் என்ற பெயரில் பட்டினி கிடைப்போர் இங்கு ஏராளம்.
சிலர் குறைவான கார்போஹைட்ரேட் எடுத்து கொண்டு உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறார்கள். இது உண்மைதான் என்றாலும் கார்போஹைட்ரேட்டை அதிகமாகக் குறைத்தால் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
undefined
இதையும் படிங்க; வயாகரா தேவையில்லை உடலுறவு சிறக்க பெண்கள் செய்ய வேண்டிய கெகல் பயிற்சி!
உடல் பருமனை குறைப்பது கடினமான காரியம் கிடையாது. தொடர்ந்து உடற்பயிற்சியும், சில வகை உணவுகளை தவிர்த்தாலும் உடல் எடையை குறைக்கலாம். பலர் உடல் எடையை குறைக்க கார்போஹைட்ரேட்டுகளை மட்டுமே குறைத்து கொள்கிறார்கள். இதனால் உடல் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். கார்போஹைட்ரேட்டுகள் நம் உடலுக்கு பல வழிகளில் உதவுகிறது.
பதப்படுத்தப்பட்ட செயற்கையான சில உணவுப் பொருட்களில் கெட்ட கார்போஹைட்ரேட் உள்ளது. இவைதான் நம் உடலுக்கு எதிரி. உதாரணமாக சொல்ல வேண்டுமெனில் சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், பேக்கரி உணவுகள், எண்ணெயில் பொரித்த துரித உணவுகள், ஐஸ்கிரீம், கார்பனேட்டட் பானங்கள் இவற்றை எடுத்து கொள்ளும்போதுதான் எடை அதிகரிக்கிறது.
நல்ல கார்போஹைட்ரேட் என்பது சிறுதானியங்கள், பழங்கள், பயறு வகைகள், விதைகள், காய்கறிகளில் உள்ளது. சர்க்கரை அதிகமிருக்கும் பழவகைகளை மட்டும் அளவாக எடுத்து கொள்ளலாம். நமது உடல் ஆரோக்கியமாக செயல்பட இவை அவசியம். கார்போஹைட்ரேட் அளவாக எடுப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்பது உண்மைதான். நாம் நாள்தோறும் உணவில் 130 கிராமுக்கும் குறைவான அளவிலேயே கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கீட்டோஜெனிக் எனும் உணவு முறையில் நாள்தோறும் 20 முதல் 50 கிராம் அளவில் மட்டும் தான் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அளவுக்கும் குறைவாக கார்போஹைட்ரேட் எடுத்துக் கொண்டால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தலைவலி வலிக்கும்!
தலைவலி ஏற்படுவது நீங்கள் போதுமான அளவு கார்போஹைட்ரேட் எடுத்து கொள்ளவில்லை என்பதன் அறிகுறி. குறைவான கார்போஹைட்ரேட் உட்கொள்ளும்போது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் போகிறது. இதனால் நமது மூளை ஏற்கனவே இருப்பில் இருக்கும் குளுக்கோஸை ஆற்றலுக்காக கீட்டோன்களாக மாற்றுகிறது. இதற்காக மூளை மாற்று ஆற்றல் மூலங்களை தேடுகிறது. அந்த பயன்பாட்டிற்கு மூளை கவனம் செலுத்துவதால் லோ- கார்போஹைட்ரேட் டயட்டில் இருப்பவர்கள் கவலை, தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். செரோடோனின், டோபமைன் ஆகிய ஹேப்பி ஹார்மோன்களை கார்போஹைட்ரேட்டுகள் உற்பத்தி செய்கின்றன. குறைவான கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்ளும் போது அந்த ஹார்மோன் சுரப்பில் சமநிலையின்மை ஏற்படக்கூடும். இதனால் மன அழுத்தமும் ஏற்படலாம்.
இதையும் படிங்க; பில்லி சூனியத்தால் கவலையா? கருங்காலி மரத்தை பத்தி தெரிஞ்சுக்கோங்க!
சோர்வு
கார்போஹைட்ரேட்டுகள் தான் நம் உடலுக்கு பிரதான ஆற்றல் தொழிற்சாலை. இது குறைவானால் ஆற்றல் குறைவாக இருக்கும். இதனால் விரைவில் சோர்வு, பலவீனம் ஆகிய பிரச்சனை ஏற்படும். இவை குறைவான கார்போஹைட்ரேட் கொண்ட உணவு பழக்கத்திற்கு மாறும் தொடங்கும் நிலையில் அதிகமாக இருக்கும்.
மலச்சிக்கல்
மிகக் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடுவதால் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். நார்ச்சத்து அதிகம் உள்ள பயறு வகைகள், தானியங்களை குறைவாக சாப்பிடுவதால் இந்த பிரச்சனை உண்டாகலாம். நார்ச்சத்து குறைவாக இருந்தால் குடல் இயக்கம் சீராக இருக்காது.
தசைப்பிடிப்பு
பொட்டாசியம், கால்சியம், சோடியம் ஆகியவை கார்போஹைட்ரேட் அதிகம் காணப்படும் தானியங்களில் உள்ளது. இந்த தாதுக்களும், ஊட்டச்சத்துகளும் தடையை பராமரிக்க உதவும். இவற்றை மிக குறைவாக சாப்பிட்டால் தசைப்பிடிப்பு, வேகமாக இதயத் துடிப்பு ஆகிய பிரச்சனைகள் வரலாம்.
துர்நாற்றம்
குறைந்த கார்போஹைட்ரேட் உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளில் வாய் துர்நாற்றமும் அடங்கும். இந்த உணவு பழக்கத்தில் உடல் செயல்படத் தேவையான சக்தியைப் பெற போதுமான கிளைகோஜன் இருப்பதில்லை. ஆகவே வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.
இதையும் படிங்க; பீர் தானேனு அடிக்கடி குடிக்காதீங்க! அதுல எவ்ளோ ஆல்கஹால் இருக்கு தெரியுமா?