வாருங்கள்! சுவையான வேர்க்கடலை சட்னி ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் நம்மில் பாலரும் இடல்ட்,தோசை, சப்பாத்தி போன்றவற்றை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு வருகிறோம். இவைகளுக்கு என்ன சட்னி வைக்கலாம் என்பதில் தான் பலருக்கும் குழப்பமாக இருக்கும். ஏனெனில் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான சட்னி வகைகளான தேங்காய் சட்னி, புதினா சட்னி, கார சட்னி , சாம்பார் என்று சாப்பிட்டு அலுத்து போய் இருப்போம். அப்படியெனில் ஒரு முறை இப்படி வேர்க்கடலை சட்னி வைத்து பாருங்கள். எத்தனை இட்லி சாப்பிட்டார்கள் என்றே தெரியாத அளவிற்கு சாப்பிடுவார்கள்.
வேர்க்கடலையில் இருக்கும் சிட்டோஸ்டெரால் நம்மை புற்று நோய் வராமல் பாதுகாக்கும். மேலும் இதில் நமது உடம்பிற்கு தேவையான இரும்பு, ஃபோலேட், ஜிங்க் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச் சத்துக்கள் உள்ளதால் மனித வாழ்விற்கு பெரிதும் நன்மை பயக்கிறது. வாருங்கள்! சுவையான வேர்க்கடலை சட்னி ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
undefined
தாளிப்பதற்கு :
கண் பார்வையை மேம்படுத்தும் கேரட் வைத்து சூப்பரான மில்க்க்ஷேக் செய்வோமா!
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றாமல் வேர்க் கடலையை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளியை அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின் வர மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் அரிந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, பின் புளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். பின் உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி மல்லித்தழை சேர்த்து மீண்டும் வதக்கி விட வேண்டும். அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு, ஆற வைத்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொண்டு ஒரு சின்ன பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடான பின் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை , வரமிளகாய்,மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அதனை சட்னியில் சேர்த்து பரிமாறினால் அட்டகாசமான வேர்க்கடலை சட்னி ரெடி!