வாருங்கள்! டேஸ்ட்டான பன்னீர் நெய் ரோஸ்ட் வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் பன்னீரும் ஒன்று . பன்னீரை எப்படி செய்து கொடுத்தாலும் உடனே அனைத்தும் காலி ஆகிவிடும். அப்படிப்பட்ட பன்னீர் வைத்து இன்று நாம் சூப்பரான ரெசிபியை காண உள்ளோம். இதனை சப்பாத்தி,நாண் ,புல்கா, ஃப்ரைட் ரைஸ் போன்றவைக்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
வாருங்கள்! டேஸ்ட்டான பன்னீர் நெய் ரோஸ்ட் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
வறுப்பதற்கு :
undefined
காதலர் தின ஸ்பெஷல் : “ஜெல்லி கேக்" செய்து நமது பிரியத்தை வெளிப்படுத்தலாம் வாங்க!
செய்முறை :
முதலில் பன்னீரை ஒரே மாதிரியான அளவில் வெட்டி வைத்துக் வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு நான் ஸ்டிக் பான் வைத்து நெய் சேர்த்து உருகிய பின்னர் அதில் வெட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மல்லித்தழையை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். புளியை ஒரு கிண்ணத்தில் ஊற வைத்து கரைசல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். காஷ்மீர் மிளகாயை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற்றி சுமார் 1மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணலி வைத்து எண்ணெய் எதுவும் சேர்க்காமல் கடுகு,தனியா,மிளகு,சீரகம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக தனித் தனியாக சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் ஊற வைத்த காஷ்மீர் மிளகாய், வறுத்து வைத்துள்ள பொருட்கள்,கெட்டி தயிர், வெல்லம், புளிக்கரைசல் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போன்று அரைக்க வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி அதி அரைத்த பேஸ்ட் , சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். அடுத்தாக அதில் அரிந்து வைத்துள்ள மல்லித்தழை மற்றும் தனியா தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். இப்போது வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து கவனமாக கிளறி விட வேண்டும். இறுதியாக லெமன் ஜூஸ் சேர்த்து கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறினால் அட்டகாசமான சுவையில் பன்னீர் நெய் ரோசஸ்ட ரெடி!