Paneer Bread Roll : பன்னீர் பிரட் ரோல்! செய்யலாமா?

By Dinesh TGFirst Published Sep 28, 2022, 9:41 PM IST
Highlights

நாம் பிரட் அண்ட் ஜாம் , எக்  பிரட் ஆம்லெட் செய்து சாப்பிட்டு இருப்போம்.  விரைவில் செய்ய கூடிய பிரெட் துண்டுகள் மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும்  பன்னீர் வைத்து  இன்று நாம் ரொம்ப  ஈஸியான , டேஸ்டான மற்றும் ஆரோக்கியமான பன்னீர் பிரட் ரோல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.  

பல் வலி ,எலும்புத் தேய்மானம்,  மூட்டு வலி எனப் பல்வேறு வலிகளைக் குறைக்கும் தன்மை கொண்டது.  ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கண்பார்வை தொடர்பான  அனைத்து பிரச்சனைகளுக்கும்  தீர்வு தருகிறது. புரோடீன்,பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட்,  மற்றும் கொழுப்புச்சத்து ஆகியன அதிகமாகவே உள்ளன.

சரிங்க இவ்ளோ மருத்துவ குணங்களை கொண்டுள்ள பன்னீர் வைத்து பன்னீர் பிரட் ரோல் செய்யலாம்  வாங்க!

தேவையான பொருட்கள்:

பன்னீர் 100gm 

பிரெட்  10 

 இஞ்சி பூண்டு  பேஸ்ட்  1ஸ்பூன் 

டொமேட்டோ சாஸ்  1ஸ்பூன் 

வெண்ணை 2 ஸ்பூன் 

தேவைக்கேற்ப ( சீரகத்தூள், ,கரம் மசாலா, மிளகாய் தூள் , மஞ்சள்தூள் )

 க்ரீன்  சட்னி 1/2 கப்  (புதினா மற்றும்  மிளகாய்)

மல்லி தழை பொடியாக நறுக்கியது. 

தேவையான அளவு உப்பு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில்  துருவிய பன்னீர், இஞ்சி பூண்டு பேஸ்ட்   மற்றும் மசாலா தூள் சேர்க்கவும் . அனைத்தையும் நன்றாக  மிக்ஸ் செய்து  டொமட்டோ சாஸ் , உப்பு,  கொஞ்சம் வெண்ணை,  கொத்தமல்லி சேர்த்து நன்றாக பிசைந்து  ஒரு வடிவத்தில் பிடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மணமணக்கும் மஷ்ரூம் சூப்!

பிரெட் துண்டின்  ஓரங்களை வெட்டி  எடுத்த பிறகு சப்பாத்தி ரோலர்  வைத்து லேசாக விரித்து முதலில்  க்ரீன் சட்னி தேய்த்து பின்  பன்னீர் மசாலாவை வைத்து மடித்து ரோல் செய்து எடுத்து வைத்துக்கவும் . அடுப்பில் டவா வைத்து சூடானதும் மிதமான சூட்டில் ஒவ்வொரு பிரெட் ரோலை எடுத்து வைத்து அதன் மேல் வெண்ணையிட்டு 2 பக்கமும்  திருப்பி விட்டு நன்கு ரோஸ்ட் ஆன உடன்  எடுத்து விடவும்.

சுவையான கிரிஸ்பியான பன்னீர் பிரெட்  ரோல் ரெடி! டொமேட்டோ சாஸ்  மற்றும் க்ரீன்   சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக  இருக்கும்.

click me!