வாருங்கள்! சில்லென்ற ‘ஆரஞ்சு மூஸ் டெஸெர்ட்’ ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இப்போது ஆரஞ்சு பழ சீசன் ஆரம்பித்துள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தை வைத்து அருமையான ஒரு ரெசிபியை செய்ய உள்ளோம். என்ன ஆரஞ்சு பழத்தில் ரெசிபியா என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? ஆரஞ்சு பழத்துடன் ஐஸ்கிரீமை சேர்த்து ஒரு அருமையான சில்லென்று டெஸெர்ட் ரெசிபியை செய்து பாருங்கள்.
வீட்டில் உள்ள குட்டிஸ்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இதன் சுவை பிடிக்கும். மேலும் இந்த ஆரஞ்சு மூஸ்ஸீனை அடிக்கடி செய்து தருமாறு குட்டிஸ்கள் அடம்பிடித்து கேட்பார்கள்.
இதனை குறைந்த நேரத்தில் செய்ய முடியும் என்பதால் எப்போது வேண்டுமானாலும் நாம் வீட்டில் செய்து ருசிக்க முடியும். வீட்டில் வரும் கெஸ்ட்டிற்கு வழக்கமாக செய்து தரும் டெஸெர்ட்களை செய்யாமல் இப்படி புதுமையாக வித்தியாசமான முறையில் 1 டெஸெர்ட் செய்து கொடுத்து அவர்களின் பாராட்டுக்களையும் அன்பினையும் எளிதாக பெறலாம்.
வாருங்கள்! சில்லென்ற ‘ஆரஞ்சு மூஸ் டெஸெர்ட்’ ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
பொங்கல் 2023 - கொஞ்சம் வித்தியாசமாக திணை கருப்பட்டி பொங்கல் செய்யலாம் வாங்க!
செய்முறை :
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பால் சேர்த்து அடுப்பின் தீயினை மிதமாக வைத்து சுண்டக் காய்த்துக் கொள்ள வேண்டும். பால் கொதித்து வரும் போது அதில் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் நன்றாக கெட்டியான பின்னர் அதனை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு குளிர செய்ய வேண்டும்.
ஆரஞ்சு பழத்தின் தோல் உரித்து அதில் இருக்கும் விதைகளையும் நீக்கி விட்டு ஆரஞ்சு பழத்தின் சதை பகுதியை மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பட்டரை பிரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து குளிர வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த பட்டரை சேர்த்து ஒரு பீட்டர் கொண்டு பீட் செய்து கிரீம் போன்ற பதத்தில் பீட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதில் வெண்ணிலா ஐஸ்கிரீம், காய்ச்சிய பால், ஆரஞ்சுப் பழம் மற்றும் ஆரஞ்சு எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை பிரிட்ஜில் சுமார் 1 மணி நேரம் வரை வைத்து குளிர வைத்துக் கொள்ள வேண்டும். 1 மணி நேரத்திற்கு பிறகு வெளியே எடுத்து சில்லென்று பரிமாறினால் "ஆரஞ்சு மூஸ்" ரெடி!