இனி சப்பாத்தி என்றால் மட்டன் தால் தான் வேண்டும் என்று கேட்பார்கள்!

By Asianet Tamil  |  First Published Feb 13, 2023, 2:49 PM IST

வாருங்கள்! டேஸ்ட்டான மட்டன் தால் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


வழக்கமாக சப்பாத்திக்கு மட்டன் குருமா, சிக்கன் கிரேவி, வெஜ் சப்ஜி போன்றவற்றை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். சற்று மாற்றமாக ஏதேனும் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இந்த ரெசிபியை ட்ரை பண்ணலாம். வழக்கமாக காய்கறிகளை சேர்த்து தான் நாம் தால் செய்து சாப்பிடுவோம். இன்று நாம் மட்டன் சேர்த்து சூப்பரான டேஸ்டில் மட்டன் தால் செய்ய உள்ளோம். இந்த மட்டன் தால் சப்பாத்தி.புல்கா,பிரியாணி, சாதம், இட்லி,தோசை என்று அனைத்திற்கும் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

வாருங்கள்! டேஸ்ட்டான மட்டன் தால் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • மட்டன் - 1/4 கிலோ
  • துவரம் பருப்பு - 1/2 கப்
  • தக்காளி - 2
  • பச்சை மிளகாய் - 2
  • கறிவேப்பிலை - சிறிது
  • மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
  • தனியா தூள் - 2 ஸ்பூன்
  • கரம் மசாலா - 2 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • மல்லித்தழை-கையளவு
  • நெய் - 1 ஸ்பூன்
  • வெங்காயம் - 1
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

 

Latest Videos

undefined

கமகமக்கும் ஹெல்த்தி "நூடுல்ஸ் வெஜ் சூப்" ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

செய்முறை:

முதலில் மட்டனை சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். 1 கிண்ணத்தில் துவரம் பருப்பை சேர்த்து அலசி சுமார் 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.மிளகாயை கீறி வைத்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு குக்கர் மட்டனை சேர்த்து தண்ணீர் ஊற்றி 7 விசில் வரை வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று குக்கரில் துவரம் பருப்பை சேர்த்து 4 விசில் வரை வேக வைத்துக் கொண்டு அதனை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் மசித்த துவரம் பருப்பு, வேக வைத்து எடுத்துள்ள மட்டன் ஆகியவற்றை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி , சீரகம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து விட்டு பின் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.

 பின் அதில் தக்காளி சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்தாக அதில் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மசாலாக்களின் காரத் தன்மை சென்ற பின் அதில் வேக வைத்து மட்டன் பருப்பை சேர்த்து கிளறி விட்டு 1 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கெட்டியான பதம் வந்த பிறகு அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி இறக்கினால் மட்டன் தால் ரெடி!

click me!