நாம் வீட்டில் வெஜ் சூப், டொமட்டோ சூப், மட்டன் சூப் செய்து இருப்போம். வேறு ஒரு வித்தியாசமான சூப் சாப்பிட வேண்டுமென்றால் , வெளியில் கடைக்கு தான் செல்வோம். ஆனால் மற்ற சூப்களை போன்று மஷ்ரூமை வைத்து வீட்டிலேயே ஆரோக்கியமான சூப் எப்படி செய்வது என்று இன்றைய பதிவில் நாம் காணலாம்.
மஷ்ரூம் பிரை, மஷ்ரூம் பிரியாணி நாம் சாப்பிட்டு இருப்போம். மஷ்ரூம் சூப் செய்து இருக்கீங்களா?
நாம் வீட்டில் வெஜ் சூப், டொமட்டோ சூப், மட்டன் சூப் செய்து இருப்போம். வேறு ஒரு வித்தியாசமான சூப் சாப்பிட வேண்டுமென்றால் , வெளியில் கடைக்கு தான் செல்வோம். ஆனால் மற்ற சூப்களை போன்று மஷ்ரூமை வைத்து வீட்டிலேயே ஆரோக்கியமான சூப் எப்படி செய்வது என்று இன்றைய பதிவில் நாம் காணலாம்.
undefined
மஷ்ரூமில் பல தாதுக்கள் உள்ளன. இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ் பொட்டசியம் மற்றும் செலீனியம்போன்ற தாதுக்கள் காளானில் அதிக அளவில் உள்ளது . இவை பொதுவாக தாவர உணவுகளில் கிடைப்பதில்லை. ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள் என்று கூறும் போது மஷ்ரூம் அதற்கு வழிவகுக்கிறது.
மூளையைப் பாதுகாக்கவும், இதய ஆரோக்கியத்திற்கும், நம்மை இளமையாக உணர வைக்கவும், எலும்பு ஆரோக்கியத்திற்கும், உடலை எனர்ஜியாக வைத்துக் கொள்ளவும் மஷ்ரூம் பயன் படுகிறது. சரிங்க இவ்ளோ நன்மைகளை தரும் மஷ்ரூம் வைத்து மஷ்ரூம் சூப் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
200 கிராம் - மஷ்ரூம்
3 ஸ்பூன் - சோள மாவு
1/2 டீஸ்பூன்- இஞ்சி பூண்டு விழுது
கையளவு - புதினா மற்றும் மல்லி (அரிந்தது )
தேவையான அளவு -மிளகு தூள்
தேவையான அளவு- உப்பு
தேவையான அளவு- வெண்ணெய்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரை அளவு தண்ணீர் எடுத்து , அடுப்பில் வைத்து தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் பொடியாக நறுக்கிய மஷ்ரூமை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடி கட்டி மஷ்ரூமை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாயை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் புதினா மற்றும் மல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அடுத்து சிறிது சோள மாவை சேர்த்து கிளற வேண்டும். பின்பு உப்பு மற்றும் சோள மாவு சிறிதளவு தண்ணீரில் கரைத்து, கடாயில் ஊற்றி 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் வேக வைத்து எடுத்துள்ள மஷ்ரூமை சேர்த்து, 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டால் மணமணக்கும் மஷ்ரூம் சூப் ரெடி!.
சூப்பரான , டேஸ்டான மற்றும் ஆரோக்கியமான மஷ்ரூம் சூப்பை வாரம் ஒரு முறையாவது வீட்டில் செய்து குடிங்க, ஆரோக்கியமாக இருங்க.