Chicken Murtabak : மலேசியா ஸ்பெஷல் "சிக்கன் முர்தபா" செய்யலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Dec 9, 2022, 10:55 PM IST

மலேசியாவின் பாரம்பரிய உணவு வகைளில் ஒன்றான சிக்கன் முர்தபாவை வீட்டில் சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றால் போதும். வேறு எதனையும் தேட மாட்டார்கள். சிக்கனில் எந்த ரெசிபி செய்தாலும் சத்தமில்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். வழக்கமாக சிக்கன் வைத்து சிக்கன் 65, சில்லி சிக்கன், சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் குருமா, சிக்கன் லாலி பாப் என்று அதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். அந்த வகையில் சிக்கன் ரெசிபிகளில் ஒன்றான மற்றும் வித்தியாசமான ஒரு ரெசிபியை தான் இன்று காண உள்ளோம்.

என்ன ரெசிபியாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?. மலேசியாவின் பாரம்பரிய உணவு வகைளில் ஒன்றான சிக்கன் முர்தபாவை வீட்டில் சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

Latest Videos

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/4 கிலோ
முட்டை - 2
கோதுமை மாவு - 3 கப்
வெங்காயம் - 1/4 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன் 
பட்டாணி - 100 கிராம்
கோஸ் - 100 கிராம்
கேரட் - 50 கிராம்
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லித்தழை -கையளவு 
மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

ருசியான மசாலா சப்பாத்தி சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கலாம் வாங்க!

செய்முறை :

முதலில் சிக்கனை நன்றாக அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், மல்லித்தழை, கோஸ்,  கேரட் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். முட்டையை உடைத்து ஒரு சிறிய பௌலில் ஊற்றி அதில் சிறிது உப்பு சேர்த்து பீட்டர் வைத்து நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். 

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து அதில் சிறிது உப்பு தூவி நன்றாக கலந்து விட்டு, பின் அதில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ள வேண்டும். மாவினை சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைத்து விட்டு, பின் சிறு உருண்டைகளாக உருட்டி , சப்பாத்தி கல்லில் தேய்த்து பின் தோசைக்கல் வைத்து சப்பாத்தி சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்துள்ள வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும்.பின் அதில் பட்டாணி, கோஸ், கேரட், மஞ்சள்தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பின் அதில் துருவிய தேங்காய் ,மல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். 

ஒரு மிக்சி ஜாரில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த சிக்கனை கடாயில் உள்ள கலவையில் சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் நாண் ஸ்டிக் பான் வைத்து அதில் அதில் 2 ஸ்பூன் முட்டையை விட்டு பரப்பி விட வேண்டும். சுட்டு வைத்துள்ள சப்பாத்தியை வைத்து அதன் மீது மீண்டும் முட்டையை 2 ஸ்பூன் சேர்த்து பரப்பி விட வேண்டும். 

பின் சப்பாத்தியின் இரண்டு பக்கமும் முட்டை கலந்த பின்னர் அதில் சிக்கன் கலவையை வைத்து சதுரமாக மடித்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு பக்கமும் எண்ணெய் சேர்த்து சுட்டு எடுத்தால் சுவையான மலேசியா ஸ்டைலில் சிக்கன் முர்தபா ரெடி!

click me!