வாருங்கள்! சுவையான மயோனைஸ் வீட்டில் எளிதாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கேக்,பர்கர்,பீசா,சாண்ட்விச் ,சாலட் போன்ற ரெசிபிகளில் சேர்க்கப்படும் மயோனைஸை நம்மில் பலரும் வெளியில் கடைகளில் இருந்து தான் வாங்கி செய்திருப்போம். அதனை வைத்து செய்யப்படும் எந்த உணவானாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனவைரும் விருப்பி சாப்பிடுவார்கள்.
அந்த மயோனைஸை இனி கடைகளில் சென்று வாங்காமல் நாமே ,நம் வீட்டில் சுத்தமாகவும், சுவையாகவும்,ஆரோக்கியமாகவும் செய்யலாம். பொதுவாக மயோனைஸை முட்டை சேர்த்து அல்லது முட்டை சேர்க்காமல் என்று இரண்டு விதங்களில் செய்ய இயலும். இன்று நாம் முட்டை சேர்த்து செய்யப்படும் மயோனஸை தான் பார்க்க உள்ளோம்
வாருங்கள்! சுவையான மயோனைஸ் வீட்டில் எளிதாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். வீட்டில் இருக்கின்ற முட்டை மற்றும் சில பொருட்களை வைத்து மிக எளிமையாக இந்த மயோனைஸை நாம் செய்து விடலாம்.
மயோனைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை-2
மிளகு-1 ஸ்பூன்
பூண்டு-4 பற்கள்
எண்ணெய் -6 -8 ஸ்பூன்
எலுமிச்சை-1/2 பழம்
சர்க்கரை-1 ஸ்பூன்
ஆரோக்கியத்தின் வரப்பிரசாதம் ஆட்டு இரத்த பொரியல்! சுவையாக செய்வது எப்படி?பார்க்கலாம் வாங்க!
செய்முறை:
ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். லெமனை பிழிந்து லெமன் ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்
பின் கிண்ணத்தில் இருக்கும் முட்டைகளை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி கொள்ள வேண்டும். மிக்சி ஜாரில் மிளகு, பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த பேஸ்ட்டில் சுமார் 4 ஸ்பூன் அளவிற்கு ரீபைண்ட் ஆயில் ஊற்றி, மீண்டும் மிக்சியை 2 சுற்று சுற்றி எடுக்க வேண்டும். பின் இப்போது பிழிந்து வைத்துள்ள லெமன் ஜூஸ் மற்றும் 2 ஸ்பூன் ரீபைண்ட் ஆயில் சேர்த்து மீண்டும் மிக்சி 2 சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். (எண்ணெய் சேர்ப்பதால் முட்டையானது கெட்டியான பதத்திற்கு மாறும்)
இப்போது அரைத்த பேஸ்ட்டில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இல்லாமல் இருக்கும் அளவிற்கு வந்த உடன் , கிரீமியாக இருக்கும். இந்த கிரீமி பேஸ்டை நன்றாக ஒரு பீட்டர் வைத்து பீட் செய்து, சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட்டால் சூப்பரான மயோனைஸ் ரெடி!!
இதனை க்ரில்ட் சிக்கன், க்ரில்ட் பொட்டேட்டோ, சிக்கன் 65, சிக்கன் லாலி பாப் போன்றவற்றிக்கு வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். இதனை மிக சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்ய இயலுவதால், எப்போது எல்லாம் இந்த மயோனைஸ் வேண்டுமோ அப்போதே இதனை பிரெஷாக செய்து கொள்ளலாம்.