Kulfi : குளு குளு வென்று "குல்ஃபி ஐஸ்" செய்யலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Jan 19, 2023, 10:33 AM IST

வாருங்கள்! சுவையான குல்ஃபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 


ஐஸ் க்ரீம் வேண்டுமா என்று கேட்டால் யாரேனும் வேண்டாம் என்பார்களா என்ன? அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஐஸ் க்ரீமும் நிச்சயமாக இடம் பெறும். பாதாம்,பிஸ்தா,வெண்ணிலா,ஸ்ட்ராபெர்ரி,பட்டர் ஸ்காட்ச் என்று பல விதமான ஐஸ் க்ரீம்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையை தருகின்றன.  எந்த வகை ஐஸ் க்ரீம் என்றாலும் குறைந்தது 2 ஐஸ் க்ரீம்களையாவது சுவைத்து மகிழ்வார்கள் குழந்தைகள். 

இப்படி அனைத்து வயதினரும் சாப்பிடக்கூடிய ஐஸ் க்ரீம்களில் ஒரு வகையான குல்ஃபி ஐஸ் க்ரீமை தான் இன்று நாம் காண உள்ளோம். வீட்டில் இருக்கும் கெட்டியான பாலை வைத்து ஸ்வீட்களை செய்வது போல் குல்ஃபியும் செய்யலாம். 

Tap to resize

Latest Videos

வாருங்கள்! சுவையான குல்ஃபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: 

பால் – 1/2 லிட்டர்
கண்டன்ஸ்டு மில்க் – 1/4 கப்
சர்க்கரை – 1/2 கப்
முந்திரி – 15
பாதாம் – 20 
பிஸ்தா-15
ஏலக்காய்– 6
கார்ன் பிளார்-1 ஸ்பூன்

செய்முறை : 

முதலில் பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா, ஏலக்காய் ஆகியவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து ஒரு சற்று சுற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.  அடுப்பில் ஒரு அடிகனமான விலாசமான பாத்திரம் வைத்து அதில் பாலை ஊற்றி சுண்டக் காய்த்துக் கொள்ள வேண்டும். பால் கொதிக்கும் போது அடிபிடிக்காமல் இருப்பதற்கு கரண்டி வைத்து கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். 

ஈவினிங் ஸ்னாக்க்சிற்கு மொறு மொறு ஜவ்வரிசி வடை செய்யலாம் வாங்க

நன்றாக கொதித்து வரும் போது அதில் கண்டன்ஸ்டு மில்க்னை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் சிறிது கார்ன் பிளார் மாவினை ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் சேர்த்து கரைத்து அதனை பாலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். 

இப்போது பால் நன்றாக சுண்டி வரும் நேரத்தில் பொடித்து வைத்துள்ள நட்ஸ்களை சேர்த்து கிளறி விட வேண்டும். தொடர்ந்து கெட்டியாக வரும் வரை கிளறி கொண்டே இருத்தல் வேண்டும். கெட்டியாக மாறிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட்டு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். 

கெட்டியான பால் நன்றாக ஆறிய பிறகு , குல்ஃபி மோல்ட்டில் ஊற்றிக் கொள்ள வேண்டும். குல்பி மோல்ட் இல்லாத பட்சத்தில் சிறு டம்ளர்களில் ஊற்றி ஐஸ் குச்சியை வைத்து சொருக வேண்டும். 

இப்போது இந்த குல்ஃபிகளை ஃப்ரீசரில் வைத்து சுமார் 8 மணி நேரம் வரை வைத்துக் கொள்ள வேண்டும். 8 மணி நேரம் பிறகு ஃப்ரீசரில் இருந்து எடுத்து டம்ளரை அல்லது மோல்ட்டை கொஞ்சம் நேரம் தண்ணீரில் வைத்திருந்து எடுத்தால் சூப்பரான சுவையில் குல்ஃபி ஐஸ் ரெடி! 

இனி வர உள்ள வெயில் காலத்தில் இப்படி வீட்டிலேயே மிகவும் ஈஸியாக ஆரோக்கியமாக சுவையாக நமது அனவைருக்கும் பிடித்த ஜில் ஜில் குல்ஃபி ஐஸ்ஸை செய்து சுவைக்கலாம்!

click me!