வாருங்கள்! கோலாபுரி ஸ்டைலில் மட்டன் கிரேவி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
அசைவப் பிரியர்கள் சிக்கன், மட்டன்,மீன் என்று எல்லாமே சாப்பிட்டாலும், மட்டனுக்கு பலரும் அடிமை என்றே கூறலாம். மட்டனில் பல விதங்களில் சமைத்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக சமைத்து சாப்பிடும் ரெசிபியாக இல்லாமல் கொஞ்சம் புதுமையாக கோலாபுரி ஸ்டைலில் மட்டன் கிரேவி செய்து சுவைத்து மகிழுங்க!
வாருங்கள்! கோலாபுரி ஸ்டைலில் மட்டன் கிரேவி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2கிலோ
பெரிய வெங்காயம்-100 கிராம்
இஞ்சி-பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
மல்லித்தழை – கையளவு
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
அரைப்பதற்கு:
பெரிய வெங்காயம் - 50 கிராம்
தேங்காய் துருவல் -கையளவு
கிராம்பு – 2.
சீரகம் - 1/2 ஸ்பூன்
மல்லி விதைகள்- 2 ஸ்பூன்
வர மிளகாய் – 8
வெள்ளை எள் - 1 1/2 ஸ்பூன்
கசகசா - 2 ஸ்பூன்
undefined
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடிய “தினை அல்வா”
செய்முறை:
முதலில் மட்டனை சுத்தம் செய்து பின் அதனை அலசி அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். வெங்காயம் மற்றும் மல்லித்தழையை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து,எண்ணெய் சூடான பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், துருவிய தேங்காய், கிராம்பு, சீரகம், மல்லி விதைகள்,வர மிளகாய், எள்ளு மற்றும் கசகசா ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து ஆற வைத்து பின் அதனை மிக்சி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மைப் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் 1 குக்கர் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடான பின் அதில் அரிந்து வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கி விட்டு பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்தாக ஊற வைத்துள்ள மட்டன் சேர்த்து உப்பு தூவி நன்கு வதக்கி விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி 6 விசில் வரும் வரை மட்டனை வேக வைக்க வேண்டும். மட்டன் வெந்த பிறகு குக்கரில் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து மசாலாவிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி விட்டு கொதிக்க வைக்க வேண்டும். கிரேவி கெட்டியாக மாறிய பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி பரிமாறினால் சூப்பரான சுவையில் கோலாபுரி மட்டன் கிரேவி ரெடி!