இந்த பொங்கலுக்கு பாரம்பரிய முறையில் வரகரிசி சர்க்கரை பொங்கல் செய்து மகிழலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Jan 11, 2023, 4:16 PM IST

வாருங்கள்! வரகரிசி சர்க்கரை பொங்கலை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


 


அறுவடை நாளாம் தைத்திருநாளில் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கும், நன்றி தெரிவிக்கும் பொங்கல் மற்றும் பல விதமானமானவற்றை சமைத்து , அதனை தெய்வஙகளுக்கு படைத்து உண்டு மகிழ்வோம்.
 

வழக்கமாக குக்கரில் செய்யும் பொங்கலை செய்யாமல் இந்த முறை சற்று வித்தியாசமாக பாரம்பரிய முறையில் பொங்கல் செய்து குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடலாம் வாங்க. பொதுவாக நாம் பச்சரிசியில் தான் சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் பாரம்பரியமான சிறுதானிய வகையில் ஒன்றான வரகரிசியில் பொங்கல் செய்ய உள்ளோம்.

வாருங்கள்! வரகரிசி சர்க்கரை பொங்கலை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை: 

  • வரகரசி - 1 கப் 
  • பாசிப்பருப்பு - 100 கிராம்
  • தேங்காய் - 1/2 கப் (துருவியது)
  • வெல்லம் - 150 கிராம்
  • பால் - 3 கப்
  • நெய் - 100 மில்லி
  • ஏலக்காய்- 1 சிட்டிகை
  • ஜாதிக்காய் பொடி -1 சிட்டிகை
  • முந்திரி- தேவையான அளவு
  • உலர் திராட்சை - தேவையான அளவு

Tap to resize

Latest Videos

    பொங்கல் 2023 - கொஞ்சம் வித்தியாசமாக திணை கருப்பட்டி பொங்கல் செய்யலாம் வாங்க,!

செய்முறை:

முதலில் செங்கல் அல்லது மற்ற பெரிய அளவிலான கற்களை வைத்து அடுப்பு போன்று செய்து, விறகு வைத்து விறகினை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் வரகரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து அலசி அதனை தண்ணீர் ஊற்றி ஒரு 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனை காய்ச்சி பாகு செய்து கொள்ள வேண்டும்.

காய்ச்சிய வெல்ல பாகினை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சாஸ் பானில் பால் ஊற்றி காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் பானை வைத்து தண்ணீர் மற்றும் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் கலந்த பால் கொதித்து வரும் நேரத்தில் வரகரசி, மற்றும் பாசிபருப்பினை சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். வரகரிசியும்,பருப்பும் நன்கு வெந்து குழைந்த பின்னர் அதில் வடிகட்டி எடுத்து வைத்துள்ள வெல்ல பாகை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

பின் அனைத்தும் நன்றாக சேர்ந்து கெட்டியாக ஆன பின்னர் நெய் ,தேங்காய்த் துருவல், ஏலக்காய் தூள் மற்றும் ஜாதிக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். அடுப்பில் சின்ன பான் வைத்து அதில் நெய் சேர்த்து உருகிய பின்னர் அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுத்துக் கொண்டு அதனை பொங்கலில் சேர்த்து கிளறி விட்டு பரிமாறினால் பாரம்பரிய முறையில் வரகரிசி பொங்கல் ரெடி!

click me!