ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க "நுங்கு பாயசம்" சூப்பராக இருக்கும்

By Dinesh TGFirst Published Jan 5, 2023, 5:17 PM IST
Highlights

வாருங்கள்! தித்திப்பான நுங்கு பாயசத்தை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பனைமரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கானது நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இது அம்மை போன்ற நோய் ஏற்படமால் தடுக்கும் தன்மை கொண்டது.

அதோடு அல்லாமல் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இது நீர் வகையை சேர்ந்த உணவு என்பதால் இது உடலில் இருக்கும் கொழுப்பினை அகற்றி உடல் எடையை குறைக்க வழி வகுக்கிறது.

பொதுவாக நுங்கினை மரத்தில் இருந்து பறித்து, தோல் சீவி தான் நாம் சாப்பிட்டு இருப்போம்.ஆனால் நுங்கை வைத்து அருமையான ஒரு ரெசிபியை செய்யலாம்.என்ன! நுங்கை வைத்து ரெசிபியா என்று எண்ணுகிறீர்களா? ஆம். நுங்கை வைத்து வித்தியாசாமான முறையில் சூப்பரான சுவையில் இனிப்பான நுங்கு பாயசம் செய்யலாம்.

வாருங்கள்! தித்திப்பான நுங்கு பாயசத்தை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நுங்கு பாயசம் செய்ய தேவையானப் பொருட்கள்:

செய்முறை:

முதலில் நுங்கின் தோலை எடுத்து ஒரே அளவிலான சிறு துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் பாதாமை போட்டு தண்ணீர் ஊற்றி சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஊறிய பாதாமை தோல் உரித்துக் கொள்ள வேண்டும்.

பின் ஏலக்காய் மற்றும் பாதாமை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொஞ்சம் பால் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து அதில் பால் ஊற்றி காய்த்துக் கொள்ள வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் அரைத்த பாதாம் கலவையைக் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்போது பாலில் நுங்குத் துண்டுகளைச் சேர்த்து அதனை பிரிட்ஜில் வைத்து 2 மணி நேரம் வைத்து குளிரச் செய்து கொள்ள வேண்டும்.

2 மணி நேரதிற்கு பிறகு, பிரிட்ஜில் இருந்து எடுத்து விட வேண்டும். பின் பாயசத்தின் மேல் 2 சிட்டிகை அளவு குங்குமப் பூவைத் தூவ வேண்டும். பின் பாயசத்தை சின்ன பௌலில் ஊற்றி சில்லெனப் பரிமாறினால் சூப்பரான சுவையில் நுங்கு பாயாசம் ரெடி!

click me!