பொதுவாக பரோட்டா என்றால் சாஃப்டாக இருக்கும்.ஆனால் இந்த பொரிச்ச பரோட்டா மொறுமொறுவென்று சூப்பராக இருக்கும். வாருங்கள்! ருசியான பொரிச்ச பரோட்டாவை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அசைவ பிரியர்களின் ஆல் டைம் பேவரைட் என்றால் பிரியாணி மற்றும் பரோட்டாவை சொல்லலாம். வழக்கமாக பிரியாணியை நமது வீட்டிலேயே செய்து சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால் பரோட்டாவை நாம் பெரும்பாலும் வெளியில் கடைக்கு சென்று தான் சாப்பிடுகிறோம்.
சூடான பரோட்டாவை பிய்த்து, அதன் மேல் சால்னா ஊற்றி, அப்படியே சாப்பிட்டால் ஆஹா! அதன் சுவையை வார்த்தைகளால் கூற முடியாது. சுவைத்து சாப்பிட்டால் தான் அதன் சுவையை உணர முடியும்.
சில்லி பரோட்டா, முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா, வீச்சு புரோட்டா, இசக்கி பரோட்டா,மலபார் புரோட்டா,சிலோன் புரோட்டா என்று பல விதமான பரோட்டாக்கள் இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் விருதுநகர் ஸ்பெஷல் பொரிச்ச பரோட்டாவை இன்றைய பதிவில் காண உள்ளோம்.
பொதுவாக பரோட்டா என்றால் சாஃப்டாக இருக்கும்.ஆனால் இந்த பொரிச்ச பரோட்டா மொறுமொறுவென்று சூப்பராக இருக்கும். வாருங்கள்! ருசியான பொரிச்ச பரோட்டாவை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா- 3 கப்
சர்க்கரை -1 ஸ்பூன்
நல்லெண்ணெய்-3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர்--தேவையான அளவு
க்ரிஸ்பி மட்டன் சாப்ஸ் இப்படி செய்து பாருங்க! - சூப்பரா இருக்கும்!
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி விட வேண்டும் .பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொள்ள வேண்டும். பின் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து மாவினை மீண்டும் நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும் .
பின் ஒரு ஈரத் துணியை பிசைந்த மாவின் மேல் போட்டு சுமார் 4 மணி நேரம் வர ஊற வைக்க வேண்டும். 4 மணி நேரம் பிறகு, மாவினை ஒரு முறை பிசைந்து விட்டு, சிறு சிறு உருண்டைகளாக செய்து சிறு எண்ணெய் விட்டு சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின் தேய்த்த மாவின் மீது சிறிது எண்ணெய் விட்டு பரோட்டாவிற்கு வட்டமாக மடிப்பது போல் மடித்துவிட வேண்டும்.பின் மடித்து வைத்துள்ள மாவை ஒருபக்கமாக லேசாக விரித்து விட வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை கொதிக்க வைக்க வேண்டும்.எண்ணெய் காய்ந்தவுடன் தேய்த்த பரோட்டாக்களை ஒவ்வொன்றாக போட்டு ,அடுப்பின் தீயை சிம்மில் வைத்து ஒரு புறம் பொறித்த பின்னர், மறு பக்கம் திருப்பி போட்டு பொரித்து எடுத்து எண்ணையை வடிகட்டி வைத்தால் பொரிச்ச பரோட்டா ரெடி!