அனைவரும் விரும்பி சாப்பிடும் க்ரீமி மஷ்ரும் டோஸ்ட் !!

By Dinesh TG  |  First Published Dec 4, 2022, 1:11 PM IST

வழக்கமாக மஷ்ரும் வைத்து மஷ்ரும் மசாலா,சூப், கிரேவி போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். மேலும் பல விதமான ரெசிபிக்களை மஷ்ரும் வைத்து நாம் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் க்ரீமி மஷ்ரும் டோஸ்ட் செய்ய உள்ளோம்.


வழக்கமாக மஷ்ரும் வைத்து மஷ்ரும் மசாலா,சூப், கிரேவி போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். மேலும் பல விதமான ரெசிபிக்களை மஷ்ரும் வைத்து நாம் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் க்ரீமி மஷ்ரும் டோஸ்ட் செய்ய உள்ளோம்.

பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை பிரட் வைத்து டோஸ்ட் செய்து கொடுத்தால், குழந்தைகள் சமத்தாக இதனை கொஞ்சம் கூட மீதம் இல்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். இதனை குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.மேலும் இதனை நாம் காலை நேர சிற்றுண்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.வழக்கமாக செய்யும் பிரட் டோஸ்டாக இல்லாமல், இதன் சுவை தனித்துவமாக இருக்கும். 

Tap to resize

Latest Videos

இதில் பிரெஷ் கிரீம்,சீஸ் ஆகியவை சேர்ப்பதால் இதன் சுவை மிக பிரமாதமாக இருக்கும். வாருங்கள்! க்ரீமி மஷ்ரும் டோஸ்ட் வீட்டில் சுவையாகவும், எளிமையாகவும் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

மஷ்ரும்-1 பாக்கெட்
பிரட் துண்டுகள் - 6 
வெங்காயம் - 1 
பூண்டு - 4 பற்கள் 
ஆரிகனோ - 1 ஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1 ஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 1/4 கப்
சீஸ் - 1/4 கப் (துருவியது) 
மல்லித்தழை-கையளவு 
எண்ணெய் -தேவையான அளவு 
உப்பு-தேவையான அளவு 

வீடு முழுவதும் கமகம வாசனையில் மீன் பொடிமாஸ் செய்து சுவைத்து மகிழுங்கள் !

செய்முறை:

முதலில் மஷ்ருமை தண்ணீரில் அலசிக் கொண்டு பின் அதனை தண்ணீர் இல்லாமல் உலர்த்திக் கொண்டு, பின் அதனை ஒரே அளவிலான சிறிய துண்டுகளாக அரிந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை எடுத்து அதை நன்கு மிக பொடியாகஅரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக சீஸை துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு நாண்ஸ்டிக் பான் வைத்து, அதில் சிறிது பட்டர் சேர்த்து உருக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பொடியாக அரிந்துள்ள வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட்டு, பின் அரிந்து வைத்துள்ள மஷ்ரும் சேர்த்து அடுப்பின் தீயினை அதிகமாக வைத்து மஷ்ருமை வதக்கி விட வேண்டும். மஷ்ரும் வதங்கிய பின், பொடியாக அரிந்த பூண்டு, ஆரிகனோ, சில்லி ப்ளேக்ஸ் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து 3 நிமிடங்கள் வரை வதக்கி விட வேண்டும்.

பின்பு அந்த கலவையில் துருவிய சீஸ் மற்றும் பிரஷ் க்ரீம் கொஞ்சம் கிளறி விட்டு,இறுதியாக மல்லித்தழையை தூவி இறக்கினால் க்ரீமி மஷ்ரும் கலவை தயாராகி விட்டது. அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து அதில் பிரட் ஸ்லைசஸ்கள் வைத்து இரு பக்கமும் பட்டர் போட்டு டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும. இதே போல் அனைத்து பிரட்களையும் டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு பிரட் டோஸ்ட் எடுத்து கொண்டு அதன் மேல் தயாரித்த க்ரீமி மஷ்ரும் கலவையை வைத்து பரப்பி அதன் மீது மற்றொரு பிரட் டோஸ்ட் வைத்து மூடி பரிமாறினால் க்ரீமி மஸ்ரூம் டோஸ்ட் ரெடி!

click me!