இன்று நாம் சற்று வித்தியாசமாக சைனீஸ் முறையில் சுவையான ஜிஞ்சர் கார்லிக் சிக்கன் வீட்டில் எப்படி சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அசைவ பிரியர்கள் அதிகமானோருக்கு பிடித்தது என்றால் சிக்கன் தான். சிக்கன் வைத்து எதை செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். சிக்கன் குழம்பு, குருமா, கட்லெட், மஞ்சூரியன், 65 என்று பல வகையான சிக்கன் ரெசிபிஸ் நாம் செய்து சாப்பிட்டு இருப்போம்.
இன்று நாம் சற்று வித்தியாசமாக சைனீஸ் முறையில் சுவையான ஜிஞ்சர் கார்லிக் சிக்கன் வீட்டில் எப்படி சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
undefined
தேவையான பொருட்கள்:
சிக்கன் போன்லெஸ் -1/2 கிலோ (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வெள்ளை எள்ளு விதைகள் - 2 ஸ்பூன்
ஒயிட் பெப்பர் பவுடர் - 1 ஸ்பூன்
கார்ன் பிளார்-1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சாஸ் செய்வதற்கு...
தண்ணீர்- 1 கப்
சர்க்கரை - 2 ஸ்பூன்
வினிகர் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
கார்ன் பிளார் - 1 ஸ்பூன்
க்ரிஸ்பி கோபி 65 செய்து சாப்பிடலாம் வாங்க!
செய்முறை:
முதலில் சிக்கனை தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின் சிக்கனில் சிறிது உப்பு, வெள்ளை மிளகுத் தூள், சிறிது எண்ணெய், கார்ன் பிளார்,சிறது தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ள வேண்டும். பின் 10 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி,அதில் சர்க்கரை, சோயா சாஸ் மற்றும் வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி,எண்ணெயை காய வைத்துக் கொண்டு, ஊற வைத்துள்ள சிக்கனில் கார்ன் பிளார் சேர்த்து பிரட்டி விட்டு ,அதனை கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு பொரித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சின்ன கிண்ணத்தில் கார்ன் பிளார் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, கட்டி இல்லாமல் நன்றாக கலந்து கரைசல் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து,அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, சூடான பின், பொடியாக அரிந்த பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி கொண்டு, பின்அதில் தனியாக எடுத்து வைத்துள்ள சாஸ் கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து அதில் பொரித்து எடுத்துள்ள சிக்கன்,கார்ன் பிளார் கரைசல் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். அனைத்தும் ஒன்றாக கலந்து வற்றி வரும் போது இறக்கி விட்டு, சிக்கன் மேல் வெள்ளை எள்ளு கொஞ்சம் தூவி விட வேண்டும். அவ்ளோதான் அட்டகாசமான சுவையில் சைனீஸ் ஜிஞ்சர் கார்லிக் சிக்கன் ரெடி!