Beetroot Halwa : டேஸ்ட்டி அண்ட் ஹெல்த்தி "பீட்ரூட் அல்வா"!

By Dinesh TGFirst Published Jan 3, 2023, 7:07 PM IST
Highlights

வாருங்கள்! ருசியான பீட்ரூட் அல்வாவை வீட்டில் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கமாக நாம் வீட்டின் விஷேச தனிங்களில் பாயசம், கேசரி என்று தான் அதிகமாக செய்து சுவைத்து இருப்போம். இனி வீட்டின் விஷேச தினங்களில் அல்வாவை மிக சுலபமாக செய்து அசத்துங்க. அல்வா என்றவுடன் பெரும்பாலும் நம்மில் பலருக்கும் நினைவில் வருவது கோதுமை அல்வா , பிரெட் அல்வா தான். அதை தவிர கேரட், பீட்ரூட், கொய்யா அல்வா என்று நாம் காய்கறிகளை வைத்தும் சுவையான அல்வா செய்யலாம்.அந்த வகையில் இன்று நாம் சத்தான பீட்ரூட் அல்வாவை காண உள்ளோம். 

வாருங்கள்! ருசியான பீட்ரூட் அல்வாவை வீட்டில் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 2 
சர்க்கரை - 1/2 கப் 
நெய் -4 ஸ்பூன் 
முந்திரி - 1 கையளவு
உலர் திராட்சை - 1 கையளவு
ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்

சர்க்கரை நோயினை விரட்ட எளிய வழி - கம்பு கொள்ளு தோசை

செய்முறை:

முதலில் பீட்ரூட்டை அலசி விட்டு அதன் தோல் நீக்கி துருவ வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் சர்க்கரை சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.  அடுப்பில் 1 குக்கர் வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி சூடு செய்து கொள்ள வேண்டும் பின் அதில் துருவிய பீட்ரூட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். 

பின் குக்கரில் பால் ஊற்றிக் கொண்டு மூடி விட்டு, அடுப்பின் தீயனை சிம்மில் வைத்து சுமார் 3 விசில் வரும் வரை வேக விட வேண்டும். 3 விசில் சென்ற பின் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு , விசில் அடங்கிய பிறகு குக்கரை திறந்து பீட்ரூட்டை  அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது நெய் சேர்த்து சூடான பின் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை சேர்த்து வறுத்துக் கொண்டு தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் கடாயில் உள்ள நெய்யில் வெந்த பீட்ரூட்டை பாலுடன் சேர்த்து சிறிது ஏலக்காய் பொடிசேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.  பால் முழுவதும் வற்றிய பிறகு, பொடித்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து கை விடாமல் கிளறி விட வேண்டும். அல்வா பதத்திற்கு வந்த பிறகு, வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை தூவி அடுப்பில் இருந்து இறக்கினால் ஹெல்த்தியான பீட் ரூட் ஹல்வா ரெடி!

click me!