வாருங்கள்! ருசியான வாழைப்பழ பூரியை வீட்டில் எப்படி சுவையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக கோதுமை மாவு வைத்து பூரி,சப்பாத்தி போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். சப்பாத்தியில் மேத்தி சப்பாத்தி, ஆலூ சப்பாத்தி, பன்னீர் சப்பாத்தி, முட்டை சப்பாத்தி என்று பல விதங்களில் செய்து சாப்பிட்டு இருப்போம்.
அதே வகையில் இன்று நாம் பூரியை சற்று வித்தியாசமாக , கொஞ்சம் இனிப்பாக செய்ய உள்ளோம். என்ன ! பூரியை இனிப்பாகவா என்று எண்ணுகிறீர்களா? ஆம் வாழைப்பழம் சேர்த்து இனிப்பான பூரியை செய்ய உள்ளோம்.
இந்த இனிப்பு பூரியை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதெற்கென தனியாக சைட் டிஸ்ம் செய்யாமல் அப்படியே சாப்பிடலாம். மேலும் இதனை ஒரு முறை செய்தால் , அடிக்கடி செய்து தரும் படி வீட்டில் உள்ள குட்டிஸ் கேட்பார்கள். இதனை பள்ளிக்கு ஸ்னாக்ஸ் பாக்ஸில் வைத்தும் கூட அனுப்பலாம்.
வாருங்கள்! ருசியான வாழைப்பழ பூரியை வீட்டில் எப்படி சுவையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழ பூரி செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 1/2 கப்
வாழைப்பழம் - 1
சீரகம் - 1/2 ஸ்பூன்
சமையல் சோடா - 1/4 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
சர்க்கரை - 2 ஸ்பூன்
தயிர் - 1/2 கரண்டி
எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை :
முதலில் மிக்சி ஜாரில் வாழைப்பழம, சர்க்கரை, தயிர் மற்றும் ஏலக்காய் தூள், ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். ஒரு விலாசமான பாத்திரத்தில் அல்லது பெரிய தட்டில் கோதுமை மாவு ,சீரகம், சமையல் சோடா சேர்த்துக் கொண்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதில் அரைத்த வாழைப்பழ பேஸ்ட் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும் .பிசைந்த மாவினை கிட்டதட்ட 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து மாவினை கையில் கொஞ்சம் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
பின் சப்பாத்தி கல்லில் உருண்டையை வைத்து வட்டமாக தேய்த்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெயை சூடாக்க வேண்டும்.எண்ணெய் சூடான பின் அடுப்பின் தீயினை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொண்டால் சூப்பரான வாழைப்பழ பூரி ரெடி!