வாருங்கள்! சுவையான பேபி கார்ன் மஞ்சூரியன் ரெசிபியை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் 65 போன்றவை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் பேபி கார்ன் வைத்து சுவையான பேபி கார்ன் மஞ்சூரியன் செய்ய உள்ளோம். இதனை குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும்.
வாருங்கள்! சுவையான பேபி கார்ன் மஞ்சூரியன் ரெசிபியை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மஞ்சூரியன் செய்வதற்கு :
undefined
இனிமே சப்பாத்தி என்றால் மீல் மேக்கர் மசாலா தான் செய்வீங்க!
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பேபி கார்னை சேர்த்துக் கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் கார்ன் பிளார், மிளகாய் தூள், மைதா, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் வேக வைத்த பேபி கார்ன் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து நன்றாக பிரட்டிக் கொண்டு அதனை சுமார் 1//2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பிறகு, பிரட்டி ஊற வைத்துள்ள பேபி கார்னை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்னர், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்தாக அதில் பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி, பின் அதில் பொடியாக அரிந்த கேப்ஸிகம் சேர்த்து 2 நிமிடம் வரை வதக்கி விட வேண்டும்.
இபோது இதில் சோயா சாஸ் சேர்த்து,நன்றாக கிளறி விட்டு பின் அதில் டொமேடோ சாஸ், க்ரீன் சில்லி சாஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து உப்பு தூவி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக இதில் பொரித்து வைத்துள்ள பேபி கார்னை சேர்த்து கிளறி விட்டு இறக்கினால் பேபி கார்ன் மஞ்சூரியன் ரெடி!