ஜோவென பெய்யும் மழைக்கு இடையில் ஒரு ''அரபிக் டீ'' சாப்பிடலாமா?

By Dinesh TG  |  First Published Oct 15, 2022, 11:10 AM IST

அரபிக் டீ யை வீட்டில் இருந்தபடியே எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். 


இன்றைய நாட்களில் சாப்பாடு இல்லாமல் கூட ஆண்கள் இருந்து விடுகிறார்கள். ஆனால் டீ பருகாமல் இருக்க முடியாத நிலையில் உள்ளார்கள். புத்துணர்ச்சி பெற வேண்டுமா? தலைவலியா ? ,உடல் சோர்வா? ஒரு டீ பருகினால், எல்லாம் சரி ஆகி விடும் என்று என்னும் அளவிற்கு, டீக்கு அடிமை ஆகி விட்டார்கள் என்றும் கூறலாம். 

அம்மாவிடம் ஒரு டீ செய்து தரமுடியுமா? என்று அடிக்கடி கேட்டு விரும்பி பருகுவர். மேலும் சிலர் வீட்டில் டீ பருகினாலும் கூட வெளியில் செல்லும் போதும் கடைகளில் டீ பருகுவர். அந்த வகையில் ஆண்கள் அன்றாடம் அதிகமாக விரும்பி பருகும் டீயின் ஒரு வகையை தான் இன்று நாம் காண உள்ளோம். டீ குடிப்பதன் மூலம் உடலும் மணமும் புத்துணர்ச்சி பெறுவதால் , நாம் செய்ய வேண்டிய எல்லா வேலைகளும் தொய்வு இல்லாமல் விரைவில் முடித்து விடலாம். பல வகையான டீ உண்டு, லெமன் டீ , இஞ்சி டீ, மசாலா டீ என்று அடுக்கி கொண்டே போகலாம். 

Tap to resize

Latest Videos

அந்த வகையில் அரபிக் டீ யை வீட்டில் இருந்தபடியே எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். 

ஆண்களே இது உங்களுக்கு தான்: விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த இந்த விதைகள் போதும்!

தேவையான பொருட்கள்:

பால் -3/4 கப்
கண்டென்ஷ்டு மில்க் - 4 ஸ்பூன் 
தண்ணீர் - 2 கப்
ஏலக்காய்-5
டீ துள் - 2 ஸ்பூன் 

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு டீ சாஸ் பான் ஐ வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொண்டு, அதனுடன் டீ பவுடர் (தினமும் உபயோகிக்கும் எந்த ப்ராண்ட்) சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்பு ஏலக்காயை எடுத்து நன்றாக தட்டி கொண்டு, டீ பவுடர் கலந்துள்ள தண்ணீரில் சேர்த்து சுமார் 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டு பின் அடுப்பபை அணைத்து விட்டு, டீ சாஸ் பான் ஐ மூடியை கொண்டு மூடி வைத்து விட வேண்டும். இப்படி செய்வதால் இதன் மணம் வெளியில் செல்லாமல் இருக்கும்.

குட்டிஸ்க்கான சத்தான ராகி டிலைட் ரெசிபி!

பின்பு ஒரு பாத்திரத்தில் பால் எடுத்துக் அதை அடுப்பில் வைத்து, தீயை சிம்மில் வைத்து பாலை நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு பாலில் சர்க்கரை சேர்க்காமல் , அதற்கு மாற்றாக கண்டென்ஷ்டு மில்க் சேர்த்து கொள்ள வேண்டும்.  இப்போது பாலை ஆடை இல்லாமல் வடிகட்டி மூலம் வடிகட்டி, டீ பவுடர் மற்றும் ஏலக்காய் கலந்து கொதிக்க வைத்துள்ள தண்ணீறில் சேர்த்து, இரண்டு அல்லது மூன்று முறை ஆற்றி விட்டால் போதும். மணமும், சுவையும் கொண்ட அரபிக் டீ ரெடி!

click me!