வாருங்கள்! தித்திப்பான பாதாம் பூரியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மாலை நேரங்களில் நாம் அடிக்கடி செய்து சாப்பிடும் உணவுகளான சமோசா, புட்டு, வடை என்று சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் புதுமையாக, வித்தியாசமாக, சுவையாக செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
வட இந்தியாவின் பல இடங்களில் பண்டிகை மற்றும் விஷேச நாட்களின் போது இதனை செய்து சுவைத்து மகிழ்வார்கள்.இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் இதன் சுவை இருக்கும்.
வாருங்கள்! தித்திப்பான பாதாம் பூரியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இனிப்பு பூரி செய்ய தேவையான பொருட்கள் :
சேமியா இருக்கா பத்தே நிமிடத்தில் காலை மாலை டிபன் ரெடி!
செய்முறை :
முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, மைதா, உப்பு, உருக்கிய நெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட்டு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவினை கொஞ்சம் சாஃப்ட்டாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் பிசைந்த மாவினை ஒரு ஈர துணி போட்டு அதனை அப்படியே 10 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடேற்ற வேண்டும், கடாய் சூடான பின்பு அதில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். சர்க்கரை நன்றாக தண்ணீரில் கரையும் வரை காத்திருந்து பின் அதில் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சிரப் செய்து கொண்டு அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது பிசைந்து ஊற வைத்துள்ள மாவினை கையில் கொஞ்சம் எடுத்து ஒரே அளவிலான சிறிய உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும்.பின் அதனை பூரி போன்று தேய்த்துக் கொண்டு சமோசா போன்று முக்கோண வடிவில் மூடி விட வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். எண்ணெய் காய்ந்த பின்னர்,அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து ஒவ்வொரு பூரியாக பொன்னிறமாக கொள்ள வேண்டும். சூடான இந்த பூரியில் சர்க்கரை பாகில் டிப் செய்து அதனை வெளியே எடுத்து அப்படியே தட்டில் வைத்து வைத்து பூரியின் மேல் பொடித்த பாதாம் மற்றும் துருவிய தேங்காயை தூவி பரிமாறினால் இனிப்பான பூரி ரெடி!