வாருங்கள்! ருசியான பன்னீர் பெப்பர் ஃப்ரையை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பன்னீரை பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்ன? பன்னீர் வைத்து எந்த ரெசிபி செய்தாலும் ,அடுத்த நிமிடமே அனைத்தும் காலி ஆகி விடும் அந்த அளவிற்கு அதன் சுவை அருமையாக இருக்கும். அனைத்து வயதினரும் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிப்பிகளில் பன்னீரும் ஒன்று. அப்படிப்பட்ட சுவையைக் கொண்ட பன்னீர் வைத்து ஸ்பைசியான பன்னீர் பெப்பர் ஃப்ரை செய்யலாம் வாங்க!
வாருங்கள்! ருசியான பன்னீர் பெப்பர் ஃப்ரையை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
undefined
சாஸ் செய்வதற்கு:
கறி குழம்பு சுவையை மிஞ்சும் மீல் மேக்கர் கிரேவி !
செய்முறை:
முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின் பன்னீர் மற்றும் கேப்ஸிகம் ஆகியவற்றை ஒரே மாதிரியான அளவில் அரிந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் மைதா, கார்ன் பிளார், உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கொஞ்சம் கலந்து விட்டு பின் அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பின் , பன்னீர் துண்டுகளை கரைத்து வைத்துள்ள மாவில் போட்டு பிரட்டி விட்டு, எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு விலாசமான கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பிறகு, சோம்பு,சீரகம் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து விட்டு அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி,பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். .
பின் அதில் கேப்ஸிகம் சேர்த்து வதக்கி விட்டு, பின் அதில் சீரக தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து மசாலாக்களின் வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் அதில் டொமேட்டோ சாஸ் மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி விட வேண்டும். இப்போது பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளைப் சேர்த்து கிளறி விட வேண்டும். இறுதியாக மல்லித்தழை மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து ஒரு முறை பிரட்டி எடுத்தால் ஸ்பைசியான பன்னீர் பெப்பர் ப்ரை ரெடி!