வாருங்கள் ! ருசியான தேங்காய் அல்வாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேங்காய் வைத்து தேங்காய் சட்னி, தேங்காய் பால், தேங்காய் சாதம் , தேங்காய் பர்பி என்று செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் தேங்காய் வைத்து சுவையான அல்வா செய்ய உள்ளோம்.
வழக்கமாக கோதுமை அல்வா,பிரட் அல்வா, கேரட் அல்வா என்று செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் சற்று வித்தியாசமாக தேங்காய் வைத்து அல்வா செய்ய உள்ளோம். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இருக்கும். இதனை நெய் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும்.
வாருங்கள் ! ருசியான தேங்காய் அல்வாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக் கிழங்கு அடை செய்வது எப்படி?
செய்முறை:
முதலில் பாதாமை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு ஊற வைத்து, பின் அதனை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று முந்திரி பருப்பினை தண்ணீரில் சேர்த்து ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்சி ஜாரில் முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மிக்சி ஜாரில் தேங்காயை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த தேங்காய் விழுதை முந்திரி பாதாம் பேஸ்ட்டுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து நெய் சேர்த்து உருகிய பின்னர் அதில் இந்த கலவையை சேர்த்து பின் அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். தொடர்ந்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். கலவையானது கொஞ்சம் கெட்டியாகி இறுகி வரும் . பின் அல்வா பதம் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
பின் இறுதியாக உலர் திராட்சை சேர்த்து கிளறி விட்டு பரிமாறினால் தித்திப்பான தேங்காய் அல்வா ரெடி!