சத்தான தினை ஆப்பம் செய்வது எப்படி? பார்க்கலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Nov 20, 2022, 2:52 AM IST

இன்று நாம் பார்க்க போகும் ரெசிபியில் தினை சேர்த்து சத்தான தினை ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


வழக்கமாக ஆப்பத்தை பச்சரிசியை வைத்து தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் பார்க்க போகும் ரெசிபியில் தினை சேர்த்து சத்தான தினை ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தினை சேர்த்து செய்வதால் இது உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. மேலும் திணையில் பல்வேறு வகையான ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுவதால்,நமது ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. தினை ஆப்பத்தை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

Latest Videos

undefined

தேவையான பொருட்கள்:

தினை - 2 கப்
இட்லி அரிசி - 1/4 கப்
தேங்காய் - 1/2 முடி 
உளுந்து - 2 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
சர்க்கரை - 2 ஸ்பூன்
வடித்த சாதம் - கையளவு 
உப்பு - தேவையான அளவு 

பச்சரிசி - 2 ஸ்பூன்  (தனியே ஊற வைக்க வேண்டும்)

ஆந்திரா ஸ்டைல் "புடலங்காய் பச்சடி" செய்யலாமா?

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தினை, இட்லி அரிசி,உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை போட்டு மூன்று முறை அலசி விட்டு பின் கிட்டத்தட்ட 4 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசியை தனியாக ஒரு கிண்ணத்தில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதே பாத்திரத்தில் துருவிய தேங்காய் மற்றும் வடித்த சாதம் சேர்த்துக் கொண்டு, அதனை கிரைண்டரில் போட்டு நைசாக மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது கிண்ணத்தில் ஊறிய பச்சரிசியை 1 மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதனை கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து மோர் பதத்திற்கு செய்து கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து மோர் போன்ற அரிசி கரைசலை ஊற்றி, தீயினை சிம்மில் வைத்து விட்டு, கை விடாமல் கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். 

கொஞ்ச நேரத்தில் மாவனது பசை போன்ற இறுகும் நேரத்தில் சிறிது உப்பு சேர்த்து நண்டாக கலந்து விட்டு, அதனை புளிக்க செய்ய வேண்டும். பின் அதனை அடுப்பில் இருந்து எடுத்து விட வேண்டும். 

பச்சரிசி மாவு ஆறிய பிறகு, அரைத்து வைத்துள்ள ஆப்ப மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, பின் மீண்டும் புளிக்க செய்ய வேண்டும். அடுத்த நாள் மாவு நன்கு புளித்து பொங்கி வந்திருக்கும் . அதில் இப்போது சிறிது சர்க்கரை சேர்த்து தளர்வாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஆப்ப கடாய் வைத்து, அதில் மாவினை ஊற்றி விட்டு, மூடி போட்டு வேக வைத்து விட்டு எடுத்தால் பஞ்சு போன்ற தினை ஆப்பம் ரெடி!

click me!