சிக்கன் சாப்பிட்டால் இந்தக் கொடிய நோய் வருமா? IVPI விளக்கம்!!

By Ma riyaFirst Published Jun 2, 2023, 6:21 PM IST
Highlights

சிக்கனை உண்பதால் உடலில் ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு நிலை உண்டாகலாம் என்பதை மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.  

சிக்கன் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் அதை உண்பவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். 

தனியார் சேனலுக்கு பிரபல சுகாதார நிபுணரான டாக்டர் எம். வாலி அளித்த பேட்டியில், சிக்கன் நுகர்வு மூலம் தனிநபர்கள் ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்புக்கு இரையாகிக்கொண்டிருக்கும் அபாயகரமான விகிதம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரின் விளக்கத்தின்படி, கோழிக்கறியில் பொதுவாக புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் ஆகிய முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனாலும் இந்த ஊட்டச்சத்து கூறுகள் நிரம்பி இருக்கும் கோழிக்கறி எப்படி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நவீனமயமான கோழி வளர்ப்பு, அவற்றின் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதன் விளைவாக, கோழியின் உடலில் கணிசமான அளவு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் குவிகின்றன. இப்படி உருவாகியுள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகளை நாம் உட்கொள்வதால், நம் உடலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ​​

​​கோழி சாப்பிடுவதால் Antimicrobial Resistance நோய் உருவாகிறதா.? வதந்திகளை நம்ப வேண்டாம்.! IVPI விளக்கம்

 

ஆன்டிபயாடிக் எதிர்ப்பை உருவாக்குதல்!! 

இந்த வகை சிக்கனை வாங்கி உண்பது உடலில் ஆன்டிபயாடிக் எதிர்ப்பின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக நாம் உட்கொள்ளும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் விளைவு குறைகிறது. காலப்போக்கில், சிக்கனில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உடலுக்குள் நுண்ணுயிர் எதிர்ப்பியாக (AMR) மாறுகின்றன. இது பல்வேறு வகையான நோய்த்தொற்றுகளிடம் இருந்து உடலை எளிதில் பாதிக்கக்கூடியதாக மாற்றுகிறது. ஆகவே ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பது சவாலாக மாறுகிறது. சுருங்க சொல்ல வேண்டுமென்றால், நம்முடை உடல் நோயை எதிர்த்து போராட முடியாதபடி சிக்கன் மாற்ற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது என்று கூறி இருந்தார். 

ஆனால் இதை மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.உலக சுகாதார நிறுவனம் வழங்கிய தகவல்கள் முழுமையாக புரிந்து கொள்ளப்படாமல் சூழலுக்கு வெளியே மேற்கோள் காட்டப்பட்டதாக IVPI தெரிவித்துள்ளது. உலகின் 10வது பெரிய நோயான AMR அல்லது Antimicrobial Resistance பற்றி உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது உண்மைதான். ஆனால் அவர்களின் அறிக்கையில் 'கோழி' என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை என்று குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

click me!