Paneer Kothu Chapathi Recipe : இந்த கட்டுரையில்பன்னீர் கொத்து சப்பாத்தி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்று காலை என்ன சமையல் செய்வது என்று தெரியவில்லையா? இட்லி தோசை சுடுவதற்கு மாவு இல்லையா? இரவு மீந்து போன சப்பாத்தி மட்டுதான் இருக்கிறது. அதை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லையே உங்களுக்கான பதிவு தான் இது.
பொதுவாகவே, குழந்தைகள் கொத்து புரோட்டா விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், அது ஆரோக்கியத்திற்கு கேடு என்பதாக் குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதில்லை. சில சமயங்களில் நான் நம்முடைய வீடுகளில் கொத்து புரோட்டா செய்து குழந்தைகளுக்கு கொடுப்போம். ஆனால் பரோட்டா சாப்பிடுவதும் தீங்கு அதையும் நாம் அதிகமாக செய்து கொடுப்பதில்லை. எனவே, உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொத்து புரோட்டா போல, சப்பாத்தியிலும் கொத்து சப்பாத்தி செய்து கொடுங்கள். குழந்தைகள் அதை ரொம்பவே விரும்பி சாப்பிடுபவர்கள். முக்கியமாக, இந்த கொத்து சப்பாத்தி செய்வது மிகவும் சுலபம். அதிக நேரம் எடுக்காது. சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் பன்னீர் கொத்து சப்பாத்தி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: Ragi Chapathi : பத்தே நிமிடத்தில் ராகி மாவில் சத்தான மற்றும் சுவையான உடனடி டிபன்.. ரெசிபி இதோ!
பன்னீர் கொத்து சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 5
பன்னீர் - 200 கிராம்
சாட் மசாலா தூள் -1/2 ஸ்பூன்
பூண்டு - 5
இஞ்சி - 1 சின்ன துண்டு
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
காஷ்மீர் மிளகுத்தூள் - 2 1/2 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: Egg Chapathi Roll : எல்லாருக்கும் பிடித்த எக் சப்பாத்தி ரோல் ! இப்படி செய்து பாருங்க!
செய்முறை:
பன்னீர் கொத்து சப்பாத்தி செய்ய முதலில், எடுத்து வைத்த சப்பாத்தியை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கிண்ணத்தில் பன்னீரை உதிர்த்து, பஅதனுடன் சாட் மசாலா தூள், காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின் பூண்டு மட்டும் இஞ்சியை இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இடித்து வைத்த இஞ்சி பூண்டு விழுது மற்றும் பொடியாக நறுக்கி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் நறுக்கி வைத்த வெங்காயத்தையும் இதனுடன் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளியையும் சேர்த்து கொள்ளுங்கள். தக்காளி நன்கு மசிந்ததும் அதில் மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உதிர்த்த பன்னீரையும் இதனுடன் சேர்த்து நன்கு வதக்குங்கள். இப்போது சப்பாத்தி துண்டுகளையும் இதனுடன் சேர்த்து வதக்கவும். பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்து சுமார் ஐந்து நிமிடங்கள் வேக வைத்து வையுங்கள்.இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் பன்னீர் கொத்து சப்பாத்தி ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D