Onion Mor Kulambu Recipe : இந்த கட்டுரையில் வெங்காயம் மோர் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா?மதியம் என்ன சமைப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது. உங்கள் வீட்டில் வெங்காயமும் தயிரும் இருக்கிறதா? அப்படியானால் அவற்றை கொண்டு சுவையான மோர் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த வெங்காயம் மோர் குழம்பை நீங்கள் சூடான சாதத்துடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபிக்கு பொரியல் எதுவும் தேவையில்லை. இவற்றில் காரம் அதிகமாக இல்லாமல் இருப்பதால் பெரியவர்களும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடக் கூடியவாறு இருக்கும். சரி வாங்க... இப்போது இந்த கட்டுரையில் வெங்காயம் மோர் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: ஐயர் வீட்டு மோர் குழம்பு... இனி நீங்களும் சுலபமாக செய்யலாம்.. ரெசிபி இதோ!
வெங்காயம் மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
கெட்டியான தயிர் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2 (நீளமாக வெட்டியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 2 துண்டு
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 2
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: மட்டன் கோலா உருண்டை குழம்பு.. இப்படி செஞ்சு அசத்துங்க!!
செய்முறை:
வெங்காய மோர் குழம்பு செய்யும் முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்த பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை போட்டு நன்கு அதை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு குளிக்காத கெட்டி தயிருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இதனுடன் அரைத்து வைத்த பச்சை மிளகாய் இஞ்சி விழுது, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் வரமிளகாய், பூண்டு, கருவேப்பிலையையும் சேர்க்கவும். பிறகு அதில் நீளமாக வெட்டி வைத்த வெங்காயம், சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். பின் எடுத்து வைத்த தயிரை இதனுடன் சேர்க்கவும். இதனுடன் பொடியாக வெட்டி வைத்த கொத்தமல்லி தூவி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான வெங்காயம் மோர் குழம்பு ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D