கூந்தல் ஆரோக்கியத்திற்கு இது சிறந்ததா? என்னன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.!!

By Kalai Selvi  |  First Published May 12, 2023, 8:57 PM IST

சில காய்கறிகள் நம் சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நல்லது. பீட்ரூட் அப்படிப்பட்ட ஒன்று.  இது குறித்து தெளிவாக இப்பதிவில் காணலாம்.


பீட்ரூட் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் 'சி' நிறைந்துள்ளது. இந்த காய்கறியை சாப்பிடுவதால் சரும பாதிப்புகள் குறையும். முடி உதிர்தலையும் குறைக்கிறது. பீட் ரூட்டில் உள்ள சத்துக்கள் சரும பாதிப்பை குறைக்க உதவுகிறது. 

பீட்ரூட் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் வயதான பிற அறிகுறிகளைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இது சருமத்தின் பொலிவை அதிகரிக்கிறது. பீட்ரூட் சாற்றில் இரும்பு, ஃபோலேட், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடி உதிர்தலையும் குறைக்கிறது. பீட்ரூட் சாற்றில் உள்ள பீட்டாலைன்கள் சருமத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் விளைவாக, உங்கள் தோல் பளபளக்கும்.

Latest Videos

undefined

பீட்ரூட்டில் அலர்ஜி எதிர்ப்பு தன்மையும் உள்ளது. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும். இது முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. பீட்ரூட் சாறு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த பீட் ரூட் முடி உதிர்வு அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

இதையும் படிங்க: முகப்பிரச்சினையால் அவதிப்படுறீங்களா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீங்க...!!

 

பீட்ரூட்டில் உள்ள புரதம், வைட்டமின் 'ஏ', கால்சியம் போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. இது தவிர, பீட் ரூட் உச்சந்தலையின் துளைகளை வலுப்படுத்த உதவுகிறது. முடி உதிர்தலையும் குறைக்கிறது. ஒரு ஸ்பூன் பீட் ரூட் சாறுடன் இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்திருக்கவும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.

click me!