கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்டவை சிறுநீரக ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதுமட்டுமில்லாமல் புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகளின் உட்கொள்ளல் உள்ளிட்டவை காரணமாகவும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.
சிறுநீரகங்கள் உடலில் இருந்து கழிவுகளை அகற்றவும், ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும், ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களை சமநிலைப்படுத்தவும், உடலுக்கு உதவும் பிற முக்கியமான செயல்பாடுகளைச் செய்யவும் உதவுகிறது. சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், உடலில் கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவம் உருவாகி ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.
கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன. இதுதவிர புகைப்பிடிப்பது, மது குடிப்பது உள்ளிட்ட பிரச்னை காரணமாகவும் சிறுநீரகங்களின் ஆரோக்கியம் கெடுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவைப் பராமரிப்பது சிறுநீரக நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.
முட்டைகோஸ்
முட்டைக்கோஸில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இது டைப் 2 நீரிழிவுப் பிரச்னை உருவாவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. முட்டைகோஸில் பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உட்கொள்வது குடல் இயக்கத்தை சீராக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும், ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவும்.
ப்ளூபெர்ரி
பலரும் ப்ளூபெர்ரி என்று சொல்லும் போது, நாவல் பழத்தை நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் அது வேறு, இது வேறு. தமிழில் இதை அவுரிநெல்லி என்று குறிப்பிடப்படுகிறது. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் "சூப்பர்ஃப்ரூட்" என்று கருதப்படுகிறது. இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதயத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. அவுரிநெல்லியில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் சோடியம் குறைவாக உள்ளது. அதனால் சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தாலும் இதை தாராளமாக உண்ணலாம்.
மிளகு
கருப்பு மிளகில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகரித்து காணப்படுகிறது. இதை தினந்தோறும் நம் உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரக நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். வைட்டமின்கள் சி மற்றும் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் உட்பட கருப்பு மிளகாயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகின்றன. மிளகில் குறிப்பாக கேப்சாந்தின் எனப்படும் பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இது நீரிழிவு, உடல் பருமன் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஆகியவற்றைத் தடுக்கவும் உதவுகிறது.
இதையும் படிங்க: 'கணுப்பிடி' எப்போது வைக்க வேண்டும்? அண்ணன், தம்பி நலம் பெருக வழிபடும் பெண்களின் கவனத்திற்கு..
பூண்டு
பூண்டு உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் சிறுநீரக நோய்க்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. பூண்டில் அலிசின் கலவை உள்ளது. இதன்காரணமாகவே பூண்டு சமைக்கப்படும் போது வலுவான நறுமணத்தை வெளியிடுகிறது. இது ரத்த நாளங்களை விரிவுப்படுத்த உதவுக்றது மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதுதவிர தமனிகளிலும் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.
முட்டை வெள்ளைக் கரு
தசையை கட்டியெழுப்புதல், திசுக்களை சரிசெய்தல் மற்றும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுதல் உள்ளிட்ட பல உடல் செயல்பாடுகளுக்கு புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதிகப்படியான புரதம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக புரதத்தை சாப்பிடும்போது இரத்தத்தில் சேரும் அதிகப்படியான கழிவுகளை சிறுநீரகங்களால் வடிகட்ட முடியாது. அதனால் புரதம் நிறைந்த உணவுகளை நீங்கள் சாப்பிடும் போது, அளவுடன் உட்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: Pongal 2023: பொங்கல் அன்று எள்ளு தண்ணீரில் குளிக்க வேண்டும் ஏன்? எதற்காக?