Vaseline benefits in tamil: உங்களிடம் வாஸ்லின் இருந்தால் 7 வழிகளில் பயன்பெறலாம். எவ்வாறு என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
சரும ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கும் பெண்களின் வீட்டு அலமாரியில் நிச்சயம் வாஸ்லின் (பெட்ரோலியம் ஜெல்லி) இருக்கும். இதனை குளிர் காலநிலையின் போது கைகளில் உள்ள சருமம் வறண்டு போகாமல் இருக்க பயன்படுத்துவார்கள். அதற்கு மட்டும் அல்ல.. நீங்கள் அறியாத மற்ற சில பயன்களும் இதில் உள்ளன. வாஸ்லினை தீக்காயம், அரிப்பு, ஷூ பாலிஷ் என பல வழிகளில் பயன்படுத்தலாம்.
தலைமுடியை ஈரப்பதமாக வைக்க வாஸ்லினை பயன்படுத்தலாம். உங்களுடைய தலைமுடியின் நுனியில் வாஸ்லின் கொஞ்சம் தடவி பாருங்கள். இதனால் வெடித்து காணப்படும் முடிகள் சரியாகும். கூந்தல் உடைந்தலை வாஸ்லின் குறைக்கும். இதுவே குளிர்காலம் முழுவதும் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க மலிவான மற்றும் எளிதான தீர்வு.
undefined
வாஸ்லின் நன்மைகள்
காதணிகள்
நீங்கள் தங்கம் அல்லது வெள்ளி காதணிகளை அணியாமல் பித்தளை காதணிகளை பேஷனுக்கு ஏற்றார் போல் பயன்படுத்துவராக இருந்தால் நிச்சயம், இது உங்களுக்கு உதவும். சிலருக்கு பிளாஸ்டிக், பித்தளை, இரும்பு காதணிகள் அணியும்போது வலிக்கும். இறுக்கமான உணர்வும் வலியும் காதணி மீது எரிச்சலை உண்டாக்கும். உங்கள் காதணிகளை அணிவதற்கு முன் உங்கள் காது மடல்களில் கொஞ்சம் பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தினால், அது இனிமையான அனுபவமாக மாறும். வலியை ஏற்படுத்தாது.
நெயில் பாலிஷ்
நெயில் பாலிஷ் பாட்டில்களை அடிக்கடி திறந்து மூடும் போது அவை இறுகி சிக்கிக் கொள்கிறது. இப்படி நெயில் பாலிஷ் பாட்டில்களின் மூடிகள் சிக்காமல் இருக்க வாஸ்லினை பாட்டிலின் முகப்பில் பூசினால் போதும். அடுத்த முறை திறக்கும் போது எந்த சிக்கலும் இல்லாமல் எளிதில் திறக்க முடியும். நகம் வெட்டிய பிறகு விரல்களில் வாஸ்லின் பூசினால் எரிச்சல் இருக்காது.
சரும பராமரிப்பு
உங்களுடைய சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கவும் ஸ்க்ரப் போல வாஸ்லின் உதவுகிறது. கொஞ்சம் கடல் உப்பை பொடி செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் வாஸ்லினை கலந்து சருமத்தில் பூசி கொஞ்ச நேரம் மசாஜ் செய்து, சில நிமிடங்களுக்குப் பிறகு கழுவுங்கள். இதனால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கிவிடும்.