வெல்லம் என்பது சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு பயன்படும் ஒரு வகை சர்க்கரை. இது உங்கள் தோல் மற்றும் கூந்தலில் மென்மையாக இருப்பது மற்றும் அவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவது உட்பட பல நன்மைகளை வழங்குகிறது.
பலர் தங்கள் சருமம் மற்றும் முடியை பராமரிக்க பல பொருட்களை பயன்படுத்துகின்றனர். சிலர் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றி வருகின்றன. இந்த நடைமுறை தற்போதைய காலத்தில் அதிகரித்து வருகிறது. இது மற்ற வழிகளை விடவும் பயனுள்ளதாக இருக்கிறது என்கிற கருத்து பொதுவாக நிலவுகிறது. அத்தகைய இயற்கையான தீர்வை வழங்கும் பொருட்களில் ஒன்று. சருமபப் பராமரிப்பு மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு வெல்லம் மூலம் கிடைக்கும் நன்மைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
வெல்லம் செயல்படுவது எப்படி?
undefined
வெல்லத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை வயதான தோற்றத்தைத் தடுக்க உதவுகின்றன. இதை சருமபப் பராமரிப்புக்கு பயன்படுத்துவதன் மூலம், நீண்ட நாட்கள் இளமையாக இருக்க முடியும்.
முடியை பளபளப்பாக்கக்கூடிய பண்புகள் வெல்லத்தில் உள்ளன. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கவும், இயற்கையான பளபளப்பைக் கொடுக்கவும், முகப்பருவை வராமல் தடுக்கவும், முடி பொலிவை அதிகரிப்பதற்கான குணநலன்களு அடங்கியுள்ளன.
பருக்கள் நீங்கும்
வெல்லத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி பருக்கள் வராமல் தடுக்கும். பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை போக்க, அரை ஸ்பூன் அளவு பொடித்த வெல்லத்தை சிறிது ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்ட் செய்யவும். பேஸ்டை கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவவும். சில நாட்களில் பருக்கள் மறைய ஆரம்பிக்கும்.
சுருக்கங்கள் தோன்றாது
வெல்லத்தில் செலினியம் போன்ற மதிப்புமிக்க தாதுக்கள் உள்ளன. இது சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கவும், சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. உங்கள் சருமம் இளமையாக தோற்றமளிக்க, வெல்லத்தை சிறிது நல்லெண்ணெய் அல்லது எள்ளுடன் கலந்து, சிறிது கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ளலாம். இது சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைக்கிறது. மேலும் நீண்டநாட்கள் இளைமையுடன் இருக்கலாம்.
தினசரி வெந்நீரில் குளிக்கும் ஆண்களே...!! இனி உஷாரா இருங்க..!!
மாய்ஸ்ஸுரைசராக செயல்படும்
வெல்லம் கிளைகோலிக் அமிலத்தால் உருவானது. இந்த அமிலம் தோல் பராமரிப்புக்காக தயாரிக்கப்படும் பொருட்களில் பொதுவாக காணப்படுகிறது. எனவே அதிக விலையுள்ள பொருட்களுக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்துவது மிகவும் மலிவான வழியாகும். எலுமிச்சை சாறு மற்றும் தேனுடன் வெல்லத்தை கலந்து மாய்ஸ்சரைசரை உருவாக்கலாம், இது உங்கள் சருமத்தை அழகாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவும்.
வெல்லம் கிளன்சர்
வெல்லம் என்பது வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படும் சக்கரையாகும். இது நமது சருமத்திற்கு நல்லது, ஏனெனில் இது நச்சுகளை வெளியேற்றி நமது சருமத்தை சுத்தமாக உணர உதவுகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் உள்ளன.