
Grey Hair Home Remedy : முதிர்ந்த வயதிற்கு பிறகு தான் முடி நரைக்க ஆரம்பிக்கும். ஆனால் சமீப காலமாகவே, சிறு குழந்தைகளுக்கு கூட வெள்ளை முடி வருகிறது. வெள்ளை முடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. சரியான ஊட்டச்சத்து இல்லாமை, மாசுபாடு மற்றும் ரசாயனம் பொருட்களின் பயன்பாடு போன்றவையாகும்.
பொதுவாக வெள்ளை முடியை யாருமே விரும்புவதில்லை. அதை நீண்ட காலம் எப்படி மறப்பது என்று மட்டுமே யோசிப்போம். அதற்காக சந்தையில் கிடைக்கும் ஹேர் டைகள், கலரிங் மருதாணி போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதை நீண்ட நாள் இருக்காது. மேலும் பயன்படுத்தினால் முடி சேதமடையும். வெள்ளை முடியை இயற்கை முறையில் கருப்பாக மாற்றலாம் தெரியுமா? வெள்ளை முடி பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த வைத்தியம் பெரிதும் உதவும். அது என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆயுர்வேதம்..
ஆயுர்வேதம் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திகின்றது. ஆயுர்வேதத்தில் செய்ய முடியாதது ஏதுமில்லை. ஆம் ஆயுர்வேதத்தின் படி, வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவது மட்டுமல்லாமல் அது வலுவாகவும், அடர்த்தியாகவும், பட்டு போல மென்மையாகவும் மாற்றவும் முடியும். நெல்லிக்காயுடன் கரிசலாங்கண்ணியை பயன்படுத்தினால் வெள்ளை முடியை கருப்பாக மாற்றலாம். அது எப்படி என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.
நெல்லிக்காய் மற்றும் கரிசலாங்கண்ணி :
நெல்லிக்காயில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வெள்ளி முடி பிரச்சனையை முற்றிலுமாக நீக்கிவிடும். கரிசலாங்கண்ணி வெள்ளை முடி பிரச்சனையை குறைக்க உதவுகிறது. இவை இரண்டையும் ஒன்றாக கலந்து உங்களது முடியில் தடவினால் வெள்ளை முடி விரைவில் கருப்பாக மாறிவிடும்.
நெல்லிக்காய் மற்றும் கரிசலாங்கண்ணி பயன்படுத்தும் முறை:
நெல்லிக்காய் பொடி - 2 ஸ்பூன்
கரிசலாங்கண்ணி பொடி - 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து அதில் தேங்காய் எண்ணெய், நெல்லிக்காய் பொடி மற்றும் கரிசலாங்கண்ணி பொடி ஆகியவற்றை சேர்த்து குறைந்த தீயில் சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் நன்றாக கொதித்த பிறகு அதை ஆற வைக்க வேண்டும். எண்ணெய் ஆறியதும் அதை கண்ணாடி ஜாடியில் சேமித்து வைக்கலாம். இந்த எண்ணெயை நீங்கள் தேவைப்படும் போதெல்லாம் அதை லேசாக சூடாக்கி உங்கள் தலைமுடி மற்றும் உச்சம் தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த எண்ணெயை இரவில் தடவி பிறகு மறுநாள் காலையில் ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கலாம். இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் உங்கள் வெள்ளை முடி நிரந்தரமாக கருப்பாக மாறிவிடும்.
கறிவேப்பிலை எண்ணெய்:
வெள்ளை முடியை கருப்பாக மாற்ற கருவேப்பிலை எண்ணெய் உதவும். கருவேப்பிலையில் அமினோ அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை முடியும் வேர்க்கால்களை வலிப்படுத்தி, முடியை கருப்பாக மாற்ற உதவும்.
கறிவேப்பிலை எண்ணெய் தயாரிப்பது எப்படி?
கறிவேப்பிலை - 10-15
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
அடுப்பில் ஒரு இரும்பு கடையை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி பிறகு கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். இலைகள் கருப்பாக மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் அவற்றின் ஊட்டச்சத்துக்கள் எண்ணெயில் இருக்கும். எண்ணெய் ஆறியதும் அதை ஒரு கண்ணாடி கொள்கலனில் சேமிக்க வேண்டும். குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் இந்த எண்ணெயை உச்சந்தலை மற்றும் முடியில் தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் வெள்ளை முடி பிரச்சனை குறையும்.
ஹென்னா மற்றும் இண்டிகோ:
ஹென்னா முடியை பலப்படுத்தும். இண்டிகோ முடிக்கு நிறத்தைக் கொடுக்கும். வெள்ளை முடியை கருப்பாக மாற்ற இவை இரண்டும் உதவும்.
பயன்படுத்தும் முறை:
ஹென்னா பவுடர் - 4 ஸ்பூன்
இண்டிகோ - 4 ஸ்பூன்
காபி தூள் - 1 ஸ்பூன்
தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
இவற்றை கொண்டு பேஸ்ட் தயாரிக்க முதலில் மருதாணி பொடியை வெந்நீரில் கலந்து பேஸ்ட் போலக்கி சுமார் 4 முதல் 6 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் தலைக்கு குளிக்கும் முன் 2 மணி நேரத்திற்கு முன்பாக இந்த பேஸ்ட்டை உங்களது தலைமுடியில் தடவி பிறகு மீண்டும் தலைக்கு குளிக்க வேண்டும். இண்டிகோ பவுடரையும் இதே முறையில் பயன்படுத்த வேண்டும். இப்படி நீங்கள் செய்தால் வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும்.