உங்கள் உதடு சிகப்பாக மாற இனி லிப்ஸ்டிக் தேவையில்லை..இத மட்டும் ட்ரை பண்ணுங்க..!!

By Kalai Selvi  |  First Published Oct 27, 2023, 5:50 PM IST

உங்கள் உதடு இயற்கையாக இளஞ்சிவப்பு நிறமாக மாற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அவை உங்களுக்கு உதவும். 


அழகான உதடுகளை பல கவிஞர்கள் பழங்களுடன் ஒப்பிடுகிறார்கள். ஆப்பிள் போன்ற அழகான உதடுகள் வேண்டும் என்பதே அனைவரின் ஆசை..அதுபோல் ரோஜா பூ போல உதடுகள் இருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசை. ஆனால் ஒரே வாரத்தில் உங்கள் உயிரற்ற உதடுகளை இளஞ்சிவப்பு நிறமாக மாற்ற வேண்டுமானால், இந்த சூப்பர் டிப்ஸை பின்பற்றுங்கள். இன்னும் சொல்லபோனால்,  லிப்ஸ்டிக் இல்லாமல், உங்கள் உதடுகளின் நிறம் உங்கள் இஷ்டத்துக்கு மாறும், நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். இதற்காக கடினமாக உழைத்து நிறைய பணம் செலவழிக்க வேண்டும் என்றில்லை. ஒரு பைசா செலவில்லாமல் உங்கள் உதடு ரோஜா பூ இதழ் போல் மாற இதை மட்டும் செய்தால் போதும். அது என்னவென்று இங்கு பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

undefined

உதடு நிறமாற்றத்திற்கான காரணங்கள்:
வேஸ்லின், லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்திய பிறகும் உங்கள் உதடுகள் ஏன் நிறமாற்றம் அடைகின்றன என்ற கேள்வி பலருக்கு இருக்கும். சூரிய ஒளி, புகைபிடித்தல், ஹார்மோன் மாற்றங்கள், இரும்புச்சத்து குறைபாடு போன்றவை உங்கள் உதடுகளின் நிறத்தை மாற்றும். ஆனால், உங்கள் அன்றாட வாழ்வில் சில எளிய குறிப்புகளைப் பின்பற்றி சில நாட்களில் உங்கள் அழகான உதடுகளை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றலாம்.

வீட்டில் இருக்கும் போது பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள்:
நிறைய தண்ணீர் குடிக்கவும்:

நம் உடலைப் போலவே சருமமும் வறட்சியடைகிறது. இதைத் தடுக்க ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இது உதடுகள் மற்றும் தோலின் பளபளப்பை அதிகரிக்கிறது

இதையும் படிங்க:  இதை ஃபாலோ பண்ணா போதும்.. இயற்கையாகவே பிங்க் நிற உதடுகளை பெறலாம்..

தக்காளி மற்றும் தயிர்:
நம் சமையலறையில் கிடைக்கும் தக்காளி மற்றும் தயிரை உபயோகிப்பதன் மூலமும் உதடுகளின் அழகை அதிகரிக்கலாம். இதற்கு தக்காளி மற்றும் தயிர் ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உதடுகளில் சீராக தடவவும். சுமார் 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இப்படி தினமும் செய்து வந்தால் உதடுகள் அழகாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.

இதையும் படிங்க:  உங்கள் உதடுகள் உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியத்தை சொல்லும் தெரியுமா?

பீட் ரூட் ஸ்க்ரப்:
பீட் ரூட் உடலில் இரத்தத்தை அதிகரிக்கும். மேலும் உதடுகளை சிவப்பாகவும் கவர்ச்சியாகவும் மாற்றுகிறது. பீட் ரூட் துண்டுகளைக் கொண்டு வாரத்திற்கு 3-4 முறை ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்வது நல்ல பலனைத் தரும். பீட்ரூட் சாறு எடுத்துக்கொள்வதும் அதிக நேர்மறையான முடிவுகளைத் தரும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இயற்கை மாய்ஸ்சரைசர்:
கற்றாழை ஜெல் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கையான மாய்ஸ்சரைசரை தினமும் இரவில் படுக்கும் முன் உதடுகளில் தடவவும். இவ்வாறு செய்வதால் உதடுகள் வெடிப்பதைத் தடுக்கலாம். மேலும் உதடுகளை இயற்கையாக இளஞ்சிவப்பு நிறமாக மாற்ற இது உதவுகிறது.

click me!