Beard Shaving Irritation : தாடி ஷேவ் செய்த பிறகு எரிச்சல் இருக்கா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!!

Published : Aug 23, 2025, 05:29 PM IST
after shaving men must apply these 4 things

சுருக்கம்

தாடியை செய்த பிறகு ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை போக்க சில சூப்பரான டிப்ஸ்களை இங்கு காணலாம்.

சில ஆண்களுக்கு தாடி எடுப்பதை அன்றாட வேலையாக வைத்திருக்கிறார்கள். முகம் வழ வழவென இருக்க விரும்பும் ஆண்கள் தங்களது நேரத்தையும் பொருட்படுத்தாமல் தினமும் ஷேவிங் செய்கிறார்கள். ஆனால் ஷேவிங் செய்த பின்பு சிலருக்கு எரிச்சல், அரிப்பு சிவந்து போதல், சொரசொரப்பு, சரும தடிப்பு, புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் ஷேவ் செய்த பிறகு சில வழிமுறைகளை பின்பற்றி வந்தால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. அழகான சருமத்தையும் பெறலாம். சரி இப்போது இந்த பதிவில் ஷேவ் செய்த பிறகு எரிச்சல் வர காரணம் என்ன? அதை தவிர்ப்பது எப்படி? என்று தெரிந்து கொள்ளலாம்.

ஷேவிங் செய்த பிறகு எரிச்சல் ஏற்படுவது ஏன்?

- தற்போது பெரும்பாலான ஆண்கள் ரசாயன பொருட்களை தான் பயன்படுத்துகின்றன. ஆனால் அவை சருமத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். அதுபோல ரேஸர் பிளேடு, உணர்திறன் சருமம், கிரீம், ஆல்கஹால் கலந்த பொருட்கள் பயன்பாடு, தவறான ஷேவிங் முறை பூஞ்சவற்றாலும் தாடி ஷேவ் செய்த பிறகு அடிக்கடி ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்புக்கு காரணங்களாகும்.

- மற்றொரு காரணம் என்னவென்றால், தாடியை ஷேவ் செய்யும் போது முழுமையாக அகற்ற வேண்டிய அவசியமில்லை. தோல் மட்டத்தில் வெட்டுவது தான் சரியான முறை. ஒருவேளை அதையும் தாண்டி தாடியை ஷேவ் செய்யும் போது இந்த எரிச்சல் ஏற்படலாம். மேலும் புடைப்புகள் வளர்ந்த முடிகள் சருமத்தில் எரிச்சல் அரிப்பு சிவத்தலை ஏற்படுத்தும். எனவே, தோல் மட்டத்தின் வரை ஷேவ் செய்வதை தவிர்க்கவும்.

எரிச்சலைப் போக்க என்ன செய்யலாம்?

1. தாடியை ஷேவிங் செய்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் நன்றாக கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் சின்ன துளிகள் மூடப்படும் மற்றும் சருமமும் நன்றாக இருக்கும். அதுபோல ஏதாவது சின்ன வெட்டுக்கள் இருந்தால் கூட இரத்தப்போக்கு இருக்காது.

2. சேவிங் செய்த பிறகு ஷேவ் லோஷனை பயன்படுத்தினால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு ஏற்படாது. இதற்கு நீங்கள் சந்தனம், தேயிலை மறையெண்ணெய், போன்ற பொருட்களை பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு ஒருவித குளிர்ச்சியை தரும். எரிச்சலை தணிக்கும்.

3. ஷேவிங் செய்த பிறகு சருமத்தின் மேல் பகுதி மென்மையற்றதாக இருக்கும். இதனால் முகம் வறண்டு போக கூட வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்க ஷேவிங் செய்த பிறகு ஒரு நல்ல மாய்சரைசர் பயன்படுத்துங்கள். இது உங்களது முகத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். அதுவும் குறிப்பாக ஷேவிங் லோஷன் போட்டதுக்கு அப்புறம் இதை போடுவது ரொம்பவே நல்லது.

4. ஷேவிங் செய்த பிறகு வெயிலில் போக வேண்டிய சூழ்நிலை வந்தால் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். இது சேவிங் செய்ததற்கு பிறகு சருமத்தை மென்மையாக வைத்திருக்கும். மேலும் வெயிலால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும்.

5. வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக பேஷியல் மாஸ்க் போடுங்கள். இது முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி சருமத்தை ரொம்பவே சுத்தமாக வைத்திருக்கும். கடைகளில் கூட நிறைய மாஸ்குகள் விற்பனையாகின்றன. இல்லையென்றால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து மாஸ் தயாரித்து போடுங்கள். உதாரணமாக கடலை மாவுடன் தயிர் மஞ்சள் கலந்து மாஸ்காக போடலாம்.

மேலே சொன்ன விஷயங்களை நீங்கள் பின்பற்றி வந்தாலே போதும் தாடியை ஷேவிங் செய்த பிறகு உங்களது முகத்தில் அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் போன்ற எந்த பிரச்சனையும் ஏற்படாது. முகம் எப்போதுமே பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க
Winter Skincare : முகத்திற்கு லெமன் ஜுஸ் தடவலாமா? குளிர்கால சரும பராமரிப்பு 'இது' முக்கியம்