Chrysopogon root oil: வெட்டிவேர் எண்ணெயின் அற்புதப் பலன்களை பற்றித் தெரியுமா உங்களுக்கு?

By Asianet Tamil  |  First Published Feb 8, 2023, 11:25 AM IST

இயற்கையாக கிடைக்கும் அழகுப் பொருட்களை பயன்படுத்துவது தான் எப்போதுமே சிறந்த வழியாகும். இதற்கு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஒரே ஒரு எண்ணெய் போதும். சருமப் பிரச்சினைகளுக்கான மிகச் சிறந்த தீர்வை வெட்டிவேர் எண்ணெய் பெற்றுத் தருகிறது.
 


அனைத்துப் பெண்களுக்குமே தங்களின் சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க தான் ஆசை இருக்கும். இதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும், எந்த வகையான அழகு குறிப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து எப்போதும் சந்தேகம் கொள்வார்கள். அதன் விளைவாகத் தான் கடைகளில் விற்கும் கண்ட கண்ட அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி, தங்களின் சருமத்தை கெடுத்துக் கொள்கின்றனர். உண்மையைச் சொல்வதென்றால், இயற்கையாக கிடைக்கும் அழகுப் பொருட்களை பயன்படுத்துவது தான் எப்போதுமே சிறந்த வழியாகும். இதற்கு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஒரே ஒரு எண்ணெய் போதும். சருமப் பிரச்சினைகளுக்கான மிகச் சிறந்த தீர்வை வெட்டிவேர் எண்ணெய் பெற்றுத் தருகிறது.

வெட்டிவேர் எண்ணெய்

Tap to resize

Latest Videos

undefined

அதிகமாக பெண்கள் வெட்டிவேர் பற்றிய விழிப்புணர்வு கூட இல்லாமல் இருக்கின்றனர். ஆனால், சில பெண்கள் மட்டும், தான் ஏற்கனவே பயன்படுத்தும் எல்மன்ட் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் என பலதரப்பட்ட எண்ணெய்களுடன் சேர்த்து வெட்டிவேர் எண்ணெயையும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வெட்டிவேர் எண்ணெய் சருமப் பராமரிப்பிற்கு மட்டுமின்றி தூக்கமின்மை, சருமத்தில் இருக்கும் சிறுசிறு பிரச்சனைகள், தலைமுடி வளர்ச்சி மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தவும் உதவுகிறது.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

வெட்டிவேர் எண்ணெயை பயன்படுத்தும் போது, தனியாகப் பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் சருமத்திற்கு ஏற்ப ஒரு சிறந்த மருத்துவரைப் பார்த்து, கலந்தாலோசித்து விட்டு பயன்படுத்த வேண்டும். இருப்பினும், 2 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு, இந்த வெட்டிவேர் எண்ணெயை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த கூடாது என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். நீங்கள் கர்ப்பமாக இருந்தால், இதனைப் பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். வெட்டி வேர் எண்ணெய் உங்களுக்கு ஒத்துக் கொள்கிறதா என்பதனை அறிய, பேட்ச் டெஸ்ட் செய்து பார்ப்பது நல்லது.

Rasavalli tuber: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற இராசவள்ளி கிழங்கின் அளப்பரிய நன்மைகள்!

வெட்டிவேர் எண்ணெயின் நன்மைகள்

வெட்டிவேர் எண்ணெய் மன விழிப்புணர்வை அதிகரிக்க உதவுறது. நீங்கள் விழிப்புடன் இருக்க சிரமப்படுகிறீர்கள் எனில், வெட்டிவர் எண்ணெயைப் பயன்படுத்துவது மன விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், மனச் சோர்வைக் குறைப்பதற்கும் உதவி புரியும்.

வெட்டிவேர் எண்ணெய் உறக்கத்தின் போது சுவாசத்தை மேம்படுத்த உதவுகிறது. தூங்கும் நேரத்தில், இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் கனமான குறட்டை உள்ளவர்களுக்கு உதவும். 2010 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வெட்டிவர் எண்ணெய் சுவாசத்தின் தரத்தை அதிகரிப்பது மற்றும் தூங்கும் போது குறட்டை விடுவதை குறைக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது.

வெட்டி வேரின் சிறந்த நச்சுத் தன்மை காரணமாக, இது ஒரு மிகச் சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படுகிறது.

வெட்டி வேர் எண்ணெயை பயன்படுத்தினால், சருமம் புத்துணர்ச்சி அடையும்; முகப்பருக்களை நீக்கும்; சருமத்தை ஊட்டமளிக்கும்.

click me!