Tooth care: பல் அழகை பாதுகாக்கும் எளிய பாட்டி வைத்தியம் இதோ?

By Asianet TamilFirst Published Feb 5, 2023, 6:23 PM IST
Highlights

நீங்கள் முக அழகைப் பாதுகாப்பது போலவே, பற்களையும் பாதுகாக்க பாட்டி வைத்தியம் சிலவற்றை இப்போது காண்போம்.

நம்மில் அனைவருமே முக அழகைப் பாதுகாப்பதில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால், பற்களை பாதுகாக்கின்றோமா என்று கேட்டால் அது கேள்விக்குறியாகவே உள்ளது. முகத்தின் அழகை அதிகரிப்பதில் பற்களுக்கு மிகு முக்கிய பங்குண்டு. பற்களில் சிதைவு அல்லது அரிப்பு ஆகியவை ஏற்பட்டால், முழுமையான துளைகள் ஏற்பட்டு, கடைசியில் பற்களை முழுமையாகவோ அல்லது பகுதி அளவோ இழக்க நேரிடுகிறது. இவ்வாறு பற்சிதைவுகள் ஏற்படும் போது பற்களில் அதிக வலி ஏற்படுகிறது. பற்சிதைவுகளை தடுப்பதற்கு வாய்ச்சுத்தத்தை முறையாக பாதுகாக்க வேண்டும். மேலும் பற்களுக்கு கால்சியம் மிகவும் அவசியம். இதன் காரணமாக கால்சியம் நிறைந்துள்ள உணவுகளான பால், தயிர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றையும் முட்டை, மீன், இறைச்சி, நட்ஸ், விட்டமின் சி சத்துக்கள் கிடைக்கக் கூடிய உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். நீங்கள் முக அழகைப் பாதுகாப்பது போலவே, பற்களையும் பாதுகாக்க பாட்டி வைத்தியம் சிலவற்றை இப்போது காண்போம். 

பற்களை பாதுகாக்க

நெல்லிக்காய்

இரும்பு சத்து அதிகம் நிறைந்த நெல்லிக்காயில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன.

ஒரு சிறிய கிண்ணத்தில், 1 தேக்கரண்டி நெல்லித் தூளுடன், 2 தேக்கரண்டி தண்ணீரை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டை, கைவிரலில் சிறிது எடுத்து பற்களில் தேய்த்து மசாஜ் செய்யவும். ஒரு நாளைக்கு ஒரு முறை இதைப் பயன்படுத்தவும். இப்படிச் செய்வதால் பற்கள் இறுக்கமாகும்.

தேன் மற்றும் கடுகு எண்ணெய்

உங்கள் வாயில் துர்நாற்றம், மற்றும் பாக்டீரியாவை அகற்ற தேன் மற்றும் கடுகு எண்ணெய் உதவுகிறது. இவை பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவதால் உங்களின் பல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒரு கிண்ணத்தில், 1 தேக்கரண்டி கடுகு எண்ணெய் மற்றும் 1/2 தேக்கரண்டி தேனை சேர்த்துக் கொள்ளவும். இரண்டையும் நன்றாக கலந்து பற்களின் மீது தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் வாயை கழுவவும்.  ஒவ்வொரு உணவிற்குப் பிறகும் இவ்வாறு செய்து வந்தால் விரைவில் பற்களுக்கு இடையே உள்ள இடைவெளி குறைந்து வலுவாகும். 

Black colour Fruits: உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இந்த 7 கருப்பு பழங்களை சாப்பிடுங்கள்!

பூண்டு

பூண்டை எடுத்து, தோலுரித்து, இரு பகுதிகளாக வெட்டிக் கொள்ளவும். பாதிக்கப்பட்ட பற்களுக்கிடையில் ஒரு துண்டு பூண்டை வைக்க வேண்டும். பூண்டிலிருந்து வெளிவரும் சாறுகள் பல் முழுதும் பரவட்டும். இந்த பாட்டி வைத்தியத்தை ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். 

மஞ்சள்

பல் வலி அதிகமாக இருக்கும் போது, மஞ்சள் தூளுடன் கல் உப்பை சேர்த்து நொறுக்கி, சொத்தைப் பல் இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும். மெதுவாக மசாஜ் செய்து வந்தால் வலி உடனடியாக தணியும். பல் வலி குறைந்து உப்பு உணர்வு தெரியும் போது, மிதமான சூட்டில் உள்ள தண்ணீரைக் கொண்டு வாயை கொப்புளித்து வந்தால் வலி சட்டென்று குறைவதை உணரலாம்.

click me!