
பொடுகு தொல்லை பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகும். இதனால் முடி தான் அதிகமாக உதிரும். எனவே இதை போக்குவதற்கு பலரும் பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு இருப்பார்கள். ஆனால் அதற்கான பலன் கிடைக்காமல் போயிருக்கும். மேலும் சிலர் இதற்காக பல மருத்துவர்கள் கூட சந்தித்து அதற்கான தீர்வை கண்டுபிடிக்க முயற்சித்திருப்பார்கள். ஆனால் பணம் தான் வீணாக செலவாகி இருக்குமே தவிர, பொடுகு நீங்கியபாடில்லை அப்படியே தான் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் சிலர் பொடுகை நீக்க பணத்தை செலவழித்து சில பொருட்களை வாங்கி பயன்படுத்தியும் இருப்பார்கள். அதனால் பொடுகு இன்னும் அதிகமானது தான் மிச்சம். எனவே பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபட செயற்கை முறையை பின்பற்றாமல் இயற்கை முறையில் பின்பற்றுங்கள். அதுவும் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி தலையில் இருக்கும் பொடுகை நிரந்தரமாக நீக்கிவிட முடியும் தெரியுமா? ஆம், இயற்கை முறையில் பொடுகை நீக்குவதற்கு சில ஹேர் பேக் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்று இப்போது பார்க்கலாம்.
பொடுகை போக்க உதவும் ஹேர் பேக் :
1. கொத்தமல்லி ஹேர் பேக் :
கொத்தமல்லி - தேவையான அளவு
விளக்கெண்ணெய் - 3 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை :
கொத்தமல்லியை மையாக அரைத்து அதனுடன் மூன்று ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து உங்களது உச்சந்தலையில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிக்க வேண்டும். இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை போட்டு வந்தால் பொடுகு போய்விடும்.
2. தயிர் மற்றும் எலுமிச்சை ஹேர் பேக் :
தயிருடன் எலுமிச்சை சாறு கலந்து அதை ஏர்பாக்காக போட்டு 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். தயிர் உச்சந்தலையை சுத்தம் செய்யும் எலுமிச்சை சாறு இறந்த செல்கள் மற்றும் பொடுகை அகற்ற உதவும்.
3. முட்டை ஹேர் மாஸ்க் :
முட்டையில் புரதம் நிறைந்துள்ளன. இது தலை முடியை வளர்க்கவும் பொடுகு மற்றும் முடி உதிர்வு பிரச்சனையை போக்கவும் பெரிதும் உதவுகிறது. முட்டையுடன் தேவையான அளவு ஆலிவ் ஆயில் கலந்து நன்றாக அடித்து அதை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
4. செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலை ஹேர் பேக்
செம்பருத்தி பூ - 7 ( உங்கள் தலைமுடியின் அடர்த்திக்கு ஏற்ப அதிகமாக கூட எடுத்துக் கொள்ளலாம்)
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை :
செம்பருத்தி இதழ்களை தனியாக எடுத்து தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கூழாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து அதை உங்களது உச்சந்தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து சுமார் 2 மணி நேரம் கழித்து மிதமான தண்ணீரில் குளிக்க வேண்டும்.
செம்பருத்தி இலை ஹேர் பேக் தயாரிக்க, 20 செம்பருத்தி இலைகளை பேஸ்ட் போல் ஆக்கி அதை கூந்தலில் தடவி சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு தலைக்கு குளிக்க வேண்டும்.
இந்த செம்பருத்தி ஹேர் பேக் பொடுகை நீக்குவதோடு மட்டுமல்லாமல் முடியை வலுவாக மற்றும் மற்றும் கருப்பாக வளர உதவும்.