
இயற்கை நமக்கு வரமாக தந்த ஒரு நல்ல காய்கறி எதுவென்றால் பீட்ரூட் தான். இதில் கொட்டி கிடைக்கும் நன்மைகள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சரும பராமரிப்பிற்கும் உதவுகிறது. ஆமாங்க, பீட்ரூட் கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும், சருமத்தை பளபளப்பாக வைக்கும், வயது முதிர்வால் ஏற்படும் சரும சுருக்கங்களை சரி செய்யும், மேலும் பலவிதமான சரும பிரச்சனைகளை போக்கவும் இது உதவுகிறது. சரி இப்போது இந்த பதிவில் உங்களது சருமத்திற்கு ஏற்ப எந்த பீட்ரூட் ஃபேஸ் பேக், எப்படி போட வேண்டுமென்று தெரிந்து கொள்ளலாம்.
1. வறண்ட சருமம் உள்ளவர்கள்
பீட்ரூட் ஃபேஸ் பேக் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. பீட்ரூட்டில் இருக்கும் இயற்கையான நிறம் தான் அதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க 2 ஸ்பூன் பீட்ரூட் சாறுடன், 1 ஸ்பூன் காய்ச்சாத பசும்பால் மற்றும் 3 சொட்டு பாதாம் பால் சேர்த்து நன்றாக கலந்து அதை உங்களது முகம் முழுவதும் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. மேலும் சருமத்தை பளிச்சென்று மாற்றும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை போடலாம்.
2. முகப்பரு உள்ளவர்கள்
பீட்ரூட்டில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், பீட்ரூடன் தயிர் சேர்ந்து தயாரிக்கப்படும் இந்த ஃபேஸ் பேக் முகப்பருவை சரி செய்யும். இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க 2 ஸ்பூன் பீட்ரூட் சாறுடன், 1 ஸ்பூன் தயிர் கலந்து அதை முகத்தில் தடவி சுமார் 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை போடலாம்.
3. முக சுருக்கங்களை போக்க
பீட்ரூட் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சி செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதனால் வயது முதிர்வால் ஏற்படும் சரும சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் சரியாகும். இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க துருவிய பீட்ரூட் உடன் 1 ஸ்பூன் தேன் கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை போடலாம்.
4. பிளாக் ஹெட்ஸ்
பிளாக் ஹெட்ஸ், முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் சிறிதளவு எலுமிச்சை சாறு தான் கொஞ்சமாக தக்காளி சாறு கலந்து அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த மீரா முகத்தை கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2 முறை போட்டு வந்தால் விரைவில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
5. கருவளையங்கள் நீங்க
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க பீட்ரூட் சாறுடன் சிறிதளவு தேன், பால் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை இந்த ஃபேஸ் பேக்கை போடலாம். இதனால் கருவளையம் மறையும். சுருக்கங்கள் நிங்கி சருமமும் இளமையாக இருக்கும்.
6. முகம் பளபளக்க
4 ஸ்பூன் பீட்ரூட் சாறுடன், 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும். தேன் இல்லையென்றால் கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ளலாம்.
7. கரும்புள்ளிகள் மறை
1 ஸ்பூன் பீட்ரூட் சாறுடன், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதை முகம் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இது கரும்புள்ளிகளை போக்கும். முகத்தை பளிச்சென்று மாற்றும்.
பீட்ரூட் கொண்டு செய்யப்படும் இந்த சிம்பிள் ஃபேஸ் பேக்குகளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் இல்லாத பளபளப்பான, இளமையான சருமத்தை பெறுவீர்கள். ஒரு முறை முயற்சி செய்துதான் பாருங்களே!!