சிலருடைய கைகள் எப்போதுமே வறட்சியாக இருக்கும். தோல்கள் எல்லாம் கடினமாக இருக்கும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நாம் பட்டுப்போன்ற மென்மையான கைகளைப் பெறலாம். கைகளின் பாதுகாப்பிற்கு என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்றும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். இன்றைக்கு பெண்களுக்கு இருக்கும் வேலைப் பளுவில் கைகளுக்கென்று தனியாக நேரமெடுத்து கவனிக்க பலருக்கும் பொறுமை இருப்பதில்லை. திருமணமாகும் வரை பட்டுப்போல் கையை வைத்திருப்பவர்கள் பிறகு அதனைப் பற்றி பெரிதாக நினைக்காமல் பாழாக்கிக் கொள்கிறார்கள்.
வீட்டு வேலைகள் பெரும்பாலும் பெண்களின் தலையில்தான் விழுகிறது. இல்லத்தரசிகளுக்கு பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, காய் நறுக்குவது, வீடு துடைக்க என்று பல விஷயங்களை அதுவரை என்றாவது ஒரு நாள் செய்தது போய் இப்போது அதுவே தினசரி கடமைகளாக ஆனபிறகு கைகளை எங்கே கவனிக்க என்று அலுத்துக் கொள்ளும் நிலைமை பொதுவாக எல்லாருக்குமே இருக்கும் . இதனால் கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
நம் முகத்தைப் போலவே கைகளுக்கும் கவனிப்பு தேவை. அவர்கள் நமது அன்றாட வேலைகளில் பெரும்பாலானவற்றைச் செய்கிறார்கள் மற்றும் பல தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கையாளுகிறார்கள். எனவே, கைகள் மிருதுவாகவும், மென்மையாகவும், அழகாகவும் இருக்க சில விசயங்களை பின்பற்ற வேண்டும். குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் அதிக அளவில் கைகளில் உள்ள தோல்கள் வறட்சியடையும்.
எனவே ஈரப்பதம் கொண்ட மாய்ஸ்சரைசர் கிரீம் பயன்படுத்தலாம். வெண்ணெய், தயிர் தடவி ஊறவைத்து பின்னர் தேய்த்து கழுவினால் கைகள் மென்மையாக இருக்கும்.
முல்தானி மிட்டியை தினமும் யூஸ் பண்ணா என்ன ஆகும்? அவசியம் 'இத' தெரிஞ்சுக்கோங்க..
தரமான ஹேண்ட் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள் மற்றும் கைகளை நன்கு கழுவிய பின் ஒரு நாளைக்கு மூன்று முறையாவது கைகளில் தடவவும் . கோடைக்காலத்தில் லேசான க்ரீஸ் இல்லாத மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும், குளிர்காலத்தில் வெண்ணெய் போன்றவைகளை பயன்படுத்தலாம். வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவுவது நல்லது. ரசாயன கலப்பில்லாத ஹேண்ட் வாஷ் பயன்படுத்தலாம்.
வாரம் ஒருமுறை வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு கைகளை ஊறவைப்பது அவசியம். அதன் பிறகு சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் எடுத்து கலந்து கைகளை தேய்த்து கழுவினால் இறந்த செல்கள் நீக்கப்பட்டு கைகளில் பட்டுப்போல மிருதுவாக மாறும். இரவில் உங்கள் கைகளை குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். உங்கள் கைகள் கரடுமுரடாக இருந்தால் உங்கள் மாய்ஸ்சரைசரை சிறிது வாசலின் உடன் கலந்து இரவில் தடவிக்கொண்டு படுத்தால் காலையில் கைகள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
Dandruff remedies: பொடுகுத்தொல்லை இனி இல்லவே இல்லை.. குட்பை சொல்லுங்க.. சிம்பிள் வீட்டு டிப்ஸ்!!
கைகளில் இருந்து இறந்த செல்கள் வெளியேறினால் கைகளுக்கு உடனடியாக ஒரு பொலிவு உண்டாகும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கைகள் மென்மையாகும். கைகளை பாதுகாக்கும் அதே நேரத்தில் நகங்களுக்கும் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடு படுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும். மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும். அப்புறம் என்ன பட்டுப்போன்ற உங்கள் கைகளைப் பார்ப்பவர்கள் பச்சக் என்று முத்தமிட்டாலும் ஆச்சரியமில்லை.