காபி புத்துணர்ச்சிக்கு மட்டுமல்ல முடிக்கும் பயன்படுத்தலாம் தெரியுமா? ஆனால் எப்படி?

By Kalai SelviFirst Published Oct 17, 2023, 2:40 PM IST
Highlights

காபி உங்கள் ஆற்றல் மட்டத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் முடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.  நீங்கள் எப்போதும் விரும்பும் உங்கள் கனவு முடியை பெற இது உதவுகிறது.  ஆனால் எப்படி?  இதோ பதில்..

தலையில் உள்ள அரிப்பு, வறட்சி மற்றும் இறந்த சரும செல்களை நீக்குவதுடன், காபியை தடவுவது முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இந்த காரணத்திற்காக, காபி முடி தயாரிப்புகளில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் காபியில் காணப்படுகின்றன. இது முடி உதிர்வதைத் தடுக்கிறது, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது, முடியை அடர்த்தியாக்குகிறது மற்றும் முடியை சுத்தம் செய்வதிலும் பயனுள்ளதாக இருக்கும். கூந்தல் பிரச்சனைகளில் இருந்து விடுபட காபியை எப்படி பயன்படுத்துவது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

முடிக்கு காபி:
கூந்தலுக்கு காபி க்ளென்சர் செய்ய, 4 முதல் 5 ஸ்பூன் காபி பவுடரை எடுத்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக குலுக்கி தலைமுடியில் தெளிக்கவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை தலைமுடியில் வைத்திருங்கள், பின்னர் நீங்கள் தலைக்கு குளிக்கலாம். இது தவிர, சர்க்கரை இல்லாமல் போட்டு வைத்திருக்கும் காபியை நன்கு அறிய பின் அவற்றை தலையில் ஊற்றி மசாஜ் செய்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பின் எப்போதும் போல தலைக்கு குளிக்கலாம். 

இதையும் படிங்க:  ச்ச்சீசீ..என்ன உலகமடா...பூனை மலத்தில் தயாரிக்கப்படும் காஸ்ட்லியான "காபி"...அதுவும் உலகம் முழுவதும் பிரபலம்..!!

காபியில் இருக்கும் காஃபின் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை சிராகத் தூண்டுகிறது. இது முடி வளர்ச்சி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமன்றி, இது உங்கள் முடியை புதியதாகவும் புத்துணர்ச்சியுடனும் வைக்க உதவுகிறது.

பொடுகு தொல்லைக்கு காபி:
இதற்கு நீங்கள் ஏற்கனவே, தயாரித்து வைத்திருக்கும் காபியை நீங்கள் ஷாம்பு போட்டு தலைக்கு குளித்த பின் இவற்றை தலையில் ஊற்ற வேண்டும்.  இது உங்கள் உச்சந்தலை முழுவதும் பரவி இருக்க வேண்டும். இவற்றிற்கு பின் நீங்கள் மறுபடியும் தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

இதையும் படிங்க:  உங்கள் முகம் கருப்பா இருக்கா? கவலைப்படாதீங்க..வெள்ளையாக மாற இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு உதவும்..!!

இயற்கையாகவே காபியில் அமிலத்தன்மை உள்ளது. அவை தலை உச்சந்தலையின் மிகச் அளவை சமநிலைப்படுத்தவும், பொடுகு தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கிறது.கூடுதலாக, இவை உங்கள் தலைமுடிக்கு ஒரு பளபளப்பான பிரகாசத்தைக் கொடுக்கிறது.

காபி ஹேர் மாஸ்க்:
இந்த ஹேர் மாக்ஸ் தயாரிக்க 2 டேபிள் ஸ்பூன் காபி பவுடர், 1 டேபிள் ஸ்பூன் தேன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு 
இந்த பேஸ்ட்டை உங்கள் முடியின் வேர்கள் முதல் நுனி வரை தடவ வேண்டும். பின்னர், ஒரு ஷவர் கேப் போட்டு 20-30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பின் ஷாம்பூ பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும். இப்போது உங்கள் முடியானது பட்டு போன்று மென்மையாக இருக்கும். இதனால் உங்கள் முடி ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!