bigg boss priyanka : பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்துள்ள பிரியங்கா ரசிகர்களின் பல கேள்விக்கு தனது யூடியூப் சேனல் மூலமாக சுவாரசியமாக பதில் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.
தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் இறுதி வாரத்தில் ராஜு, பிரியங்கா, அமீர், பாவனி, நிரூப் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் ராஜு பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகி உள்ளார்.
பிரியங்கா 2-வது இடத்தையும், பாவனி 3-வது இடத்தையும் பிடிக்க. அமீர், நிரூப் ஆகியோர் முறையே 4 மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளனர். என்னதான் ராஜு டைட்டில் வின்னராக இருந்தாலும், இந்த சீசனில் அவரைவிட அதிகம் சம்பளம் பெற்றது பிரியங்கா தான். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்ததால், இவருக்கு ஒரு வாரத்துக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 16 வாரத்துக்கு ரூ.32 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம்.
வீட்டிற்குள் இருந்தவரை நிரூப் - பிரியங்கா இடையே அவ்வப்போது சண்டை வெடித்த வண்ணமே இருந்தது..சண்டைப்போட்டு வந்தாலும், நிரூப்பை பிரியங்கா எந்த இடத்திலும் விட்டு கொடுத்தது இல்லை. எப்போதும் என் நண்பன், நண்பன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார் பிரியங்கா. அவரின் உண்மையான அன்பை பார்த்து நிரூப்பும் நெகிழ்ந்து நீ அம்மாவைபோல என்று அன்பு பரிசும் அளித்தார்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 2வது வெற்றியாளரான பிரியங்கா வெளியே வந்த அடுத்த நாளே நிரூப், அபிஷேக் மற்றும் அபிநய்யுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டிங்கில் உ ள்ளது.
இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்துள்ள பிரியங்கா ரசிகர்களின் பல கேள்விக்கு தனது யூடியூப் சேனல் மூலமாக சுவாரசியமாக பதில் அளித்துள்ளார். அதில் தில் இந்த நிகழ்ச்சிக்கு போனதே ஒரு சவாலான விஷயம் தான். போவதற்கு முன்பு பலரும் வேண்டாம் என்றார்கள். இருந்தாலும் நான் இதில் கலந்து கொள்ள வேண்டும் பிரியங்கா எப்படி என்பதை மக்களுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தேன். அந்த ஆசை நிறைவேறி உள்ளது. தற்போது கிடைத்திருக்கும் வெற்றி உங்களால் எனக்கு கிடைத்தது என்றார்.
என் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களை நான் சந்தித்து இருக்கிறேன். அதை எப்படியாவது கடந்து போக வேண்டும் என்று நினைத்து ஓடிக்கொண்டே இருப்பேன். நான் நேசிக்கும் வேலை மட்டும் தான், என்னை சந்தோஷப்படுத்தியது. எந்த ஒரு கஷ்டத்தையும் என் மூளைக்குள் செல்லாமல் பார்த்துக்கொண்டது என் வேலை என்று மனம் திறந்து பேசியுள்ளார்..
அதோடு மற்ற போட்டியாளர்களை இன்னும் சந்திக்கவில்லை, அனைவரும் குடும்பத்துடன் பிஸியாக இருக்கிறார்கள். அதுவும் இல்லாமல் வெளியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் சந்திக்க முடியவில்லை. விரைவில் அனைவரையும் சந்திப்பேன் என்றார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வரும் போது மக்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம் இருந்தது. ஆனால், உங்களின் அன்பு எல்லை இல்லாதது இதை என்றும் மறக்க மாட்டேன் என்று மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் பிரியங்கா.