
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடிய 16 பிரபலங்களில் ஒருவர், இலங்கையை சேர்ந்த பிரபல மாடல் தர்ஷன். பல்வேறு கஷ்டங்களை கடந்து, தற்போது முன்னணி மாடலாக இருக்கும் இவர், ஒரு ஜாடையில் பார்ப்பதற்கு அதர்வா மாதிரியே இருக்கிறார் என பலரும் கூறி வந்தனர்.
அதற்கு ஏற்ற போல், தர்ஷனும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னை பலர் பார்ப்பதற்கு அதர்வா போல் இருப்பதாக சொல்கிறார்கள், ஆகவே அவருடன் இணைந்து ஒரு புகைப்படனாவது எடுத்து கொள்ளவேண்டும் என ஆசை உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது பொது நிகழ்ச்சி ஒன்றில் எதிர்பாராமல் நடிகர் அதர்வா மற்றும் தர்ஷன் இருவரும் சந்திக்க நேர்ந்துள்ளது. உடனே தன்னுடைய நீண்ட நாள் ஆசையான, அதர்வாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்ளவேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்றி கொண்டுள்ளார் தர்ஷன்.
இந்த புகைப்படத்தை, தர்ஷன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் இருவரும் பார்ப்பதற்கு சகோதரர்கள் போல் உள்ளனர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அந்த புகைப்படம் இதோ...