இதுமட்டுமின்றி வகுப்புகளுக்குச் செல்லாமல் இருப்பது, படிப்பை பாதியிலேயே நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் சமூக ஊடக செயல்பாடுகளை அந்நாட்டு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதனால் சட்ட மீறல்களில் ஈடுபடும் மாணவர்களின் விசாக்களை அதிரடியாக ரத்து செய்கிறது.
மாணவர்களுக்கு கடும் பாதிப்பு
அமெரிக்க அரசு திடீரென விசாக்களை ரத்து செய்ததால் வெளிநாட்டு மாணவர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். ஏனெனில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் விசாக்கள் ரத்து செய்யட்டதால் அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விசாக்கள் ரத்து செய்யப்படும்போது, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பல்கலைக்கழகங்களுக்கு அரசு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடைசி நேரத்தில் அந்த பல்கலைக்கழகங்களாலும் ஏதும் செய்ய முடியவில்லை.